தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதன் காரணமே ஒரு குறிப்பிட்ட வயதினை நெருங்கும் பொழுது உடல் உபாதைகள் தலை தூக்குகின்றன. எனவே இன்றே உடனே உடற்பயிற்சியினை ஆரம்பியுங்கள்.

அளவான உடற்பயிற்சி கூட மூட்டு வலியினையும், எலும்பு தேய்மானத்தினையும் வெகுவாகக் குறைந்து விடும்.  தேய்ந்த மெல்லிய எலும்பும், மடிந்த கூன் போன்ற தோற்றமும் முதுமை வெளிப்பாடு என்று நாம் நினைக்கின்றோம்.

உடல் பயிற்சி, நடைபயிற்சி என்று பேசுவது அதிகமாகி விட்டாலும் இதனை நாம் எவ்வளவு தூரம் கடை பிடிக்கிறோம் என்பதுதான் முக்கியம். அப்படி என்னதான் உடற்பயிற்சியால் என்ன நன்மை கிடைக்கிறது என்று கேட்கலாம்.

மூட்டு வலி தடுக்கப்படுகின்றது. எலும்புகள் உறுதியாகின்றன. படபடப்பு நீங்குகிறது. உடல் சக்தி கூடுகின்றது. தேவையான உடல் எடையை அடைய முடிகின்றது. சர்க்கரை நோயை கட்டுப்படுகின்றது. மூளை சுறுசுறுப்பாய் செயல்படுகின்றது. தசைகள் உறுதிபடுகின்றன. கை, கால் நீட்டி மடக்குவதில் பிரச்சினை இன்றி இருக்கின்றது.

பல நன்மைகள் கொண்ட உடற்பயிற்சியினை தினமும் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை செய்து வந்தால் ஒரு வருடத்தில் 8 சதவீத அளவு உடலின் இயக்கத்திறன் கூடுகின்றது.

தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் வாரத்தில் 5 நாட்கள் செய்தால் போதுமானது. ஜிம்முக்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்பதில்லை.

வீட்டில் இருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால் கூட போதுமானது. ஆனால் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது.

இன்றைய இளைய தலைமுறையினரின் ஆரோக்கியம் அவர்கள் கையில் தான் உள்ளது என்பதை உணர்ந்து உடனே உடற்பயிற்சியை செய்ய ஆரம்பியுங்கள்.