பல் ஈறுகளை வலிமையாக்க சில டிப்ஸ்...

** கிராம்பு எண்ணெய்

கிராம்பில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வலி நிவாரணி தன்மை உள்ளது. எனவே கிராம்பு எண்ணெயை கொண்டு நமது பற்களைத் துலக்க வேண்டும். அல்லது ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 துளி கிராம்பு எண்ணெய் சேர்த்து கலந்து  வாயை  நன்றாக கொப்பளிக்க வேண்டும்

** பட்டை எண்ணெய்

பட்டையில் தயாரிக்கப்படும் எண்ணெய் ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் சிறந்தது. எனவே இந்த பட்டை எண்ணெயை 1 கப் நீரில், 2 துளிகள் சேர்த்து கலந்து, வாயைக் கொப்பளித்து வந்தால், ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனைகள் வராது.

** புதினா எண்ணெய்

புதினா எண்ணெயில் சக்தி வாய்ந்த ஆன்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளதால், இது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே பற்களைத் துலக்கும் போது, புதினா எண்ணெயில் 1 துளியை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

** யூகலிப்டஸ் எண்ணெய்

நீலகிரி தைலம் என்று கூறப்படும் யூகலிப்டஸ் எண்ணெய், நமது வாயில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி கொண்டது. எனவே நாம் பற்களைத் துலக்கும் போது, இந்த எண்ணெயை ஒரு துளி சேர்த்துக் கொள்ள வேண்டும்.