Do you know Eggs control the size of bad cholesterol in the body ...
ஏலக்காய்
இந்த நறுமணமுள்ள உணவுப் பொருளானது உடல் எடை குறைவதில் மிகவும் உதவியாக உள்ளது. மேலும் வாய் துர்நாற்றத்தை தடுத்து, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தினை
தானியங்களில் தினையும் ஒரு சிறந்த கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருள். இது ராஜஸ்தானில் மிகவும் பிரபலமான, உடல் எடை குறைவதற்கும், அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள்.
முழு கோதுமை
முழு கோதுமையானது உடலுக்கு மிகவும் சிறப்பான ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. எனவே முழு கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் உடல் எடையைக் குறைப்பதற்கு, ஒரு சிறந்த உணவாக இருக்கும்.
கடுகு எண்ணெய்
உணவுகளில் எண்ணெய் சேர்க்காமல் சமைக்க முடியாது. எனவே எண்ணெயில் கடுகு எண்ணெயை சேர்த்து சமைத்தால், அதில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புக்களையும் கரைத்துவிடும்.
பூண்டு
பூண்டில், உடலில் சேரும் கெட்டக் கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுப் பொருளான அல்லீசின் (Allicin) என்னும் பொருள் உள்ளது. எனவே ஆண்கள் இந்திய உணவுப் பொருளான பூண்டை, தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறைவதோடு, இதய நோய் வராமலும் தடுக்கலாம்.
முட்டை
ஆண்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் முட்டையும் ஒன்று. ஏனெனில் முட்டை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து மற்றும் உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையையும் கட்டுக்குள் கொண்டுவரும்.
