உடல் எடையை குறைக்கவும், உடல் ரீதியான பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கவும் அற்புதமான தீர்வுகள் இதோ...

** உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடித்தால், வயிற்றில் அமிலம் சுரப்பது குறைவாக இருக்கும்.துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் வரவே வராது.

** 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒரு கோப்பை நீரில், கலந்து தினமும் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.

** காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால், சில நாட்களில் உடல் எடை குறைவதைக் காணலாம்.

** தினமும் காலையில் தொடர்ந்து 12 கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டு வந்தால், உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைத்து, அதற்கு பதிலாக, கோதுமையினால் செய்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.

** 3 கப் தண்ணீருடன் வெற்றிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து, அதனை சில நாட்களுக்கு குடித்து வந்தால், இருமல் பிரச்சனைகள் ஏற்படாது.

** பல்வலி உள்ளவர்கள் துளசி இலை 2, சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தினால், உடனே வலி குறையும்.

** சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க, குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு தினமும் குளிக்க வேண்டும். இதனால் விரைவில் தழும்புகள் மறையும்.

** குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு, நீருடன் தேனைக் கலந்து கொடுத்தால், விரைவில் இருமல் மற்றும் காய்ச்சல் குணமாகும்.

** காரட் மற்றும் தக்காளிச் சாறு ஆகியவற்றுடன், சிறிதளவு தேன் கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், உடல் வலிமையாகும்.

** வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்த, கொய்யா இலைகளை மென்று தின்றாலே போதும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.