Do you know Cough is caused by germs and dust ...

இருமலானது இரண்டு வகையில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒன்று கிருமிகள் தாக்கத்தில் தொண்டையில் சளி உருவாகி, நுரையீரலுக்கு பரவி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

மற்றொரு வகை இருமலானது, தூசு, ரசாயனம் போன்ற பலவிதமான கிருமிகள் காரணங்களால் அலர்ஜி போன்று தொடர்ச்சியான வறட்டு இருமல் ஏற்படுகிறது.

வறட்டு இருமலை 24 மணிநேரத்தில் குணப்படுத்த இதோ சூப்பரான டிப்ஸ்:

தேவையான பொருட்கள்

பால்- 1 டம்ளர்

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

முட்டை மஞ்சள் கரு – 1

செய்முறை

பாலை நன்றாக சூடுபடுத்தி அந்த பால் பொங்கி வரும் போது முட்டையின் மஞ்சள் கருவை கலந்து நன்றாக கலக்க வேண்டும். பின் அந்த பால் இளஞ்சூடாக இருக்கும்போது, அதில் தேன் கலந்து, அதை இரவு உணவு சாப்பிட்டு முடித்ததும் குடித்து வந்தால் தீராத வறட்டு இருமல் கூட 24 மணி நேரத்தில் குணமாகிவிடும்.