Do you know Brush after eating can harm your teeth

பொதுவாக காலையிலும் இரவிலும் என இரண்டு வேளை அவசியம் பல் துலக்க வேண்டும் என்பது மருத்துவ பரிந்துரை.

ஆனால் உணவு, ஸ்னாக்ஸ், ஸ்வீட்ஸ், குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொண்ட பின் பல் துலக்குவதை பலர் வழக்கமாகவே கொண்டுள்ளனர். இது ஆரோக்கியத்துக்கு பதில் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அடிக்கடி பல் துலக்குவது, உணவு உட்கொண்ட பின்னர் பல் துலக்குவது பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். குறிப்பாக அமிலத்தன்மை உள்ள உணவுகளை உட்கொண்ட பின்பும், நுரை ததும்பும் பானங்களை அருந்தியவுடனும் பல் துலக்குவதை தவிர்க்க வேண்டும்.

இவற்றை உட்கொண்ட பின் பல் துலக்கினால் பல்லின் பாதுகாப்புக்கு அரணாக இருக்கும் எனாமல் படிமம் அதற்கு உள்ளிருக்கும் ‘டென்டின் பகுதி ஆகியவை முற்றிலும் பாதிக்கும். இதனால் உணவின் அமிலத்தன்மை பற்களின் உட்பகுதிகளில் எளிதாக ஊடுருவி உட்பகுதிகளுக்கும் கேடு விளைவிக்கும்.

எனவே பற்களை பாதுகாத்து கொள்ள உணவு உட்கொண்டவுடன் பல் துலக்குவதை தவிர்க்க வேண்டியது அவசியம். ஆனால் வெறும் தண்ணீரால் வாய் கொப்பளிப்பது நல்லது.