Do you know Basil helps to prevent mosquitoes

1.. துளசி ஒரு கிருமிநாசினி. பூச்சி, கொசுக்கள் வராமல் தடுக்கும்.

2.. இதன் இலைகள் கபத்தை வெளியேற்றும். இலைகளின் சாறு, காய்ச்சல், ரத்தப்போக்கைக் குணப்படுத்தும்.

3.. வாந்தியை தடுத்து நிறுத்தி குடல் புழுக்களை அழிக்கும்.

4.. ஜலதோஷம், மார்புச்சளி, காதுவலிக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

5.. பச்சிலை, தண்டுகள், வேர்கள் ஆகியவற்றை நசுக்கி படர் தாமரை உள்பட பிற தோல் வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

6.. இதன் கஷாயம் மார்புச்சளி போன்றவற்றைத் தீர்க்கும்.

7.. மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு ஆகியவற்றிற்கு மருந்தாக உதவும்.

8.. இதன் விதைகள் சிறுநீரக வியாதிகளை குணப்படுத்தும் மருந்து தயாரிக்க உதவுகிறது.

9.. இதில் இருந்து பார்னைல் அசிட்டேட், கார்டினினி, ஹீமிலீன், யூஜினால், கார்வாக்ரால், காம்பீன், சினியோல், டெசில்டிஹைடு, பால்மிட்டிக், ஸ்டியாரிக், அஸ்கார்பிக் அமிலங்கள் போன்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது.

10.. இதன் விதைகள், இலைகள், வேர் என முழு தாவரத்திலும் மருத்துவக் குணங்கள் காணப்படுகிறது.