நமது உடம்பிற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய எந்த உணவாக இருந்தாலும் அதை நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் நீண்ட நாட்கள் வைத்து உபயோகப்படுத்தும் உணவுகளில் நச்சுக்களின் தன்மை அதிகரிப்பதால், அது நமக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

அப்படி கீழ்காணும் இந்த உணவுகள் இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்...

** வெள்ளை ப்ரட்

கடையில் வாங்கி சாப்பிடக் கூடிய வெள்ளை ப்ரட், பாப்கார்ன் போன்ற உலர் உணவுகள் மிகவும் ஆபத்தானவை. அதிலும் இந்த உணவுகளை நீண்ட நாட்கள் வைத்திருந்து அல்லது அது உலர்ந்த பின் சாப்பிடுவது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும்.

** வெங்காயம்

மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு வகைகளில் வெங்காயம் ஒரு சிறந்த உணவுப் பொருளாகும். அதுவே அந்த வெங்காயம் முளைத்து இருந்து, அதனுள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது நமது உடலுக்கு தீங்கை தரும்.

** உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் தோலானது பச்சை நிறமுடன், முளைத்து இருந்தால், அந்தக் கிழங்கை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது நமது உடலின் நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

** முட்டை

முட்டையை சமைப்பதற்கு உடைக்கும் போது, அதில் மஞ்சள் மற்றும் வெள்ளைக் கரு இரண்டும் கலந்து இருந்தால், அதை தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் அப்படி இருக்கும் முட்டை கெட்டுப்போனது என்று அர்த்தமாகும்.