Do not clean the house when you are on the side of the children. Why?

** குழந்தைகளுக்கு வந்து போகும் தொல்லைகளை உடனுக்குடன் கவனிக்க வேண்டும். குறிப்பாக மலச்சிக்கலை, உடனே கவனிப்பது நல்லது. இல்லையெனில், வயிற்று வலியால் அலற ஆரம்பித்து விடுவார்கள். பசலைக் கீரையை எடுத்து, பொடிப் பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன், தினமும் கொடுப்பது மலச்சிக்கலை போக்கும்.

** வளரும் குழந்தைகளுக்கு, தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலை விட, அதிகச் சத்துகள் தேங்காய்ப்பாலில் நிறைந்துள்ளன.

** சிறு குழந்தைகள் பக்கத்தில் இருக்கும் போது, வீட்டை சுத்தப்படுத்தக் கூடாது. ஏனெனில் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இளைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.

** சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு, இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது, உணவு எடுத்துச் சென்று, குழந்தைகளுக்குக் கொடுத்து விடலாம். இதனால், குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதைத் தவிர்க்க முடியும்.

** குழந்தைகளுக்கு சாப்ட் டிரிங்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், கால்சியம் ஆகியவை சத்தினை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கின்றன.

** குழந்தை வளர்ப்பான் எனப்படும் வசம்பு ஒன்றை, குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால், எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது. படுக்கையை சுற்றிலும் ஐந்தாறு புதினா இலைகளை கசக்கிப் போட்டால் ஈ தொல்லை இருக்காது.

** பாலில், தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.

** குழந்தைகளுக்கு இரவு, பேரீச்சம்பழம் கொடுத்து, பால் அல்லது தண்ணீர் கொடுத்தால், அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.

** குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன்பு சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்து விட்டு வெட்டினால் எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.

** குழந்தை காதுப்பக்கம் கையை வைத்துக்கொண்டு அழுதால் அது காது வலியாக இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

** குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால், உடனே கவனியுங்கள். கவனிக்காமல் விட்டுவிட்டால் சீழ், மூளைக்குச் சென்று, மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

** ** குழந்தையின் கண்கள் நடுவே, வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளி விடுவதுபோல், ஒருவித ஒளியோ தோன்றினால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.