Different types of rice are the benefits of eating them ...

1.. சிகப்பரிசி

சிகப்பரிசியில் அதிகமான பைபர் மற்றும் எண்ணெய் தன்மை உள்ளது. எனவே இந்த அரிசி சாதத்தை சாப்பிடுவதால், அது ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வதை தடுத்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

2.. பாஸ்மதி அரிசி

அரிசி வகைகளில் மற்ற அரிசிகளை விட, இந்த பாஸ்மதி அரிசியில் ஏராளமான பைபர் அடங்கியுள்ளது.

3.. மூங்கில் அரிசி

மூங்கில் அரிசியில் நார்ச்சத்து அதிகம். இதை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் மற்றும் எலும்புகள் வலிமை பெறுவதுடன், சர்க்கரையின் அளவு குறையும்.

4.. புழுங்கல் அரிசி

புழுங்கல் அரிசி உணவுகள் விரைவில் ஜீரணம் ஆகும் தன்மை கொண்டது. இந்த அரிசி சாதம் முழுமையாக ஜீரணம் அடைய 1 மணிநேரம் மட்டுமே.

5.. பச்சரிசி
உடல் மெலிந்து பலவீனமாக உள்ளவர்கள், இந்த பச்சரிசி சாதத்தை சாப்பிடலாம். ஆனால், வயிறு மற்றும் செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்ப்பது நல்லது.

6.. மாப்பிள்ளை சம்பா

மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரதம், நார்ச்சத்து மற்றும் பல தாதுக்கள் உள்ளதால், இதை குண்டாக உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் நரம்புகள் வலிமையாகும்.

7.. சீரகச்சம்பா அரிசி

இந்த வகை அரிசி இனிப்பு சுவை மிக்கது. இதை உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுவாத நோய்கள் குணமாகும்.

8.. தினை அரிசி

தினை அரிசியை சாப்பிடுவதால், ரத்தச்சோகை, காய்ச்சல், சளி பிரச்சனைகள் உடனே குணமாகும். ஆனால் இந்த அரிசியை அதிகமாக சாப்பிடக் கூடாது.