காலையில் இந்த 3 விஷயங்களை செய்தால் உடல் எடை ஆயுளுக்கும் அதிகரிக்காது... ஒரு நோய் வராமல் விரட்டி அடிக்கலாம்!!

உடல் பருமன் என்பது வாழ்க்கை முறை தொடர்பான ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதனை தடுக்க காலையில் மூன்று விஷயங்களை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். 

 

daily routine to lose weight fast

மக்கள் தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க பல வழிகளை முயற்சி செய்கின்றனர். சிலர் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். சிலர் வெவ்வேறு வகையான உணவு பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இது மட்டுமின்றி, சிலர் உடல் எடையை குறைக்க சாப்பிடுவதை கூட நிறுத்தி பட்டினி கிடக்கின்றனர். இனியும் அப்படி செய்து சிரமப்பட வேண்டியதில்லை. தினமும் இந்த 3 பழக்கங்களைக் கடைபிடித்தால் உடல் எடையை குறைக்க கணிசமாக குறைக்கலாம். 

ஆயில் புல்லிங்: 

பழங்காலத்தில் ஆயில் புல்லிங் செய்து உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை போக்க பயன்பட்டது. ஆயுர்வேதத்திலும் இதைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்வதன் மூலம், வாயில் உள்ள பாக்டீரியா மற்றும் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளின் வீக்கம் அகற்றப்பட்டு, உடல் நச்சுத்தன்மையை நீக்குகிறது மற்றும் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.

ஆயில் புல்லிங் செய்முறை: 

ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொள்ளுங்கள். அப்படியே 5 முதல் 20 நிமிடங்களுக்கு வாயில் அதை ஊற வைக்கவும். பிறகு அதை கொப்பளித்து துப்பவும். இந்த எண்ணெயை விழுங்குவதைத் தவிர்க்கவும். வாயில் உள்ள பாக்டீரியாக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

இரண்டு டம்ளர் தண்ணீர்: 

வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உடலின் நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும். இதனால் அவை சரியாக செயல்படும். நீர் நம்முடைய இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. உடலின் நச்சு நீக்கியாக செயல்படுகிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்தால், உடலில் நீர்ச்சத்து இருக்கும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. எடை குறைப்பதில் இது உதவுகிறது. இது தவிர, காலையில் தண்ணீர் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதனால் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். காலையில் தண்ணீர் குடிப்பது முகத்திற்கு பளபளப்பைக் கொண்டுவருகிறது. நல்ல முடி ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

ஊறவைத்த நட்ஸ் 

உலர் பழங்கள், நட்ஸ் போன்றவை நம் உடலில் உள்ள தீமை செய்யும் என்சைம்களை அகற்றும். அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் ஆரோக்கியத்திற்கு உதவும். நட்ஸ் உண்பதால் கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் போன்றவை உடலுக்கு கிடைக்கின்றன. இவற்றை சாப்பிடுவதன் மூலம், பல நோய்களில் இருந்து விலகி இருப்பது மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியமும் அழகும் கூடுகிறது. இரத்த சர்க்கரை அளவையும் எடையையும் கட்டுப்படுத்துகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. மனநலம் நன்றாக இருக்கும். இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஹார்மோன் சுரப்பை சமநிலையில் வைத்திருக்கும்.  இந்த 3 பழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்தால் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம். மிதமான உடற்பயிற்சியும் தேவை. 

இதையும் படிங்க: காலை எழுந்ததும் சூரிய நமஸ்காரம் கட்டாயம் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios