Curry leaves cures cancer at starting stage
உணவில் கறிவேப்பிலையை பார்த்தாலே, பலருக்கும் வெறுப்பாக தான் இருக்கும். அதை தூக்கி எறிந்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி இந்தியாவில் உள்ள சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம், கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடுயூட் ஆப் கெமிகல் பயாலஜி மற்றும் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வில் பல்வேறு அதிசயத்தக்க உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன.
இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது. இதன் காரணமாக புரஸ்ட்டேட் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதேபோல் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கறிவேப்பிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.
