காலநிலை மாற்றத்தால் பனியில் உறைந்த பழங்கால கிருமிகள் வெளிவரலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை

காலநிலை மாற்றத்தால், பனியில் உறைந்த பழங்கால கிருமிகளை வெளிவரலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Climate change may reveal ancient germs frozen in ice.. Experts warn

காலநிலை மாற்றம் என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. உலகம் முழுவதும் தொழிற்சாலை பெருகியது, காடுகளை அழிப்பது, நீர் நிலைகளை அழிப்பது போன்ற பல காரணங்களால் பூமி இயல்பை விட மிக வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதனால் பனிப்பாறைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக உருகி வருகின்றன. இதனால் கடல்நீர் மட்டமும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கடலோர நகரங்கள் மற்றும் கடலா சூழப்பட்ட தீவுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறை உருகுவதால், நீண்ட காலமாக பனியில் உறைந்திருக்கும் பழங்கால கிருமிகள் வெளியேறி, புதிய இடங்களுக்கு செல்லக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் (PSA) முன்முயற்சியான டெல்லி ஆராய்ச்சி அமலாக்கம் மற்றும் கண்டுபிடிப்பு மாநாடு நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மாறிவரும் காலநிலை, அதிக வெள்ளம் மற்றும் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துவதால், மேலும் நீரினால் பரவும் மற்றும் ஜூனோடிக் நோய்களுக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ராஜீவ் பால் உள்ளிட்ட வல்லுநர்கள் இதுகுறித்த கவலையை எடுத்துரைத்தனர். வெப்பநிலை அதிகரிக்கும் போது, வெப்பத்தால் காயம் ஏற்படும் ஆபத்து அதிகமாகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக, நீண்ட காலமாக பனியில் உறைந்திருக்கும் மிகவும் பழமையான நோய்க்கிருமிகள் புதிய இடங்களுக்குச் செல்லக்கூடும் என்று நிதி ஆயோக் தலைவர் வி.கே பால் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் பேசிய அவர் " அதிக வெப்பநிலை காரணமாக பனி உருகும்போது, இந்த பழங்கால கிருமிகள் வெளியிடப்படலாம். இது ஏற்கனவே சிக்கலான உடல்நலம் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய கவலையின் மற்றொரு பிரச்சனையை சேர்க்கிறது" என்று தெரிவித்தார்..

அறிவியல் செயலர் பர்விந்தர் மைனி கூறுகையில், "பருவநிலை மாற்றத்தால், கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள், மற்றும் ஜூனோடிக் நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கிறது. மறைமுகமாக, உணவு முறைகள், ஊட்டச்சத்து, நீர் அணுகல், வீட்டுவசதி, கல்வி, மற்றும் கவனிப்பு ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம். " இந்த சவால்களை எதிர்த்துப் போராட அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறை தேவை. காலநிலை மாற்றப் பிரச்சினையை கூட்டாகக் கையாள்வதில் தொழில்துறை, கல்வித்துறை, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பல்வேறு துறைகளின் பங்களிப்பும் தேவை” என்று தெரிவித்தார். 

அடுத்த அச்சுறுத்தலாக மாறும் புதிய வகை Eris கொரோனா.. WHO வெளியிட்ட முக்கிய தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios