calcium problem issue

பாரா தைராய்டு சுரப்பிக்கும் கால்சியதுக்கும் என்ன சம்பந்தம் கழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பிக்கு பின்புறம் உள்ள சிறிய, பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கும், நான்கு நாளமில்லா சுரப்பிகள் இவை. 

எலும்பு, ரத்தத்தில் கால்சியம் சத்து சீராக கிடைக்க உதவுகிறது. வைட்டமின் டி சத்தை செயல்திறன் உள்ள சத்தாக மாற்ற உதவுகிறது. தவிர, பாஸ்பரஸ் சத்தின் விகிதத்தை சரி செய்கிறது.

எலும்புகள் சீராக வளரவும், உறுதியாக இருக்கவும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அவசியம். ரத்தத்தில் கால்சியம் அளவு, 8.5 மி.கி., முதல் 10.மி.கி., வரை இருக்க வேண்டும். 
உணவிலிருந்து கிடைக்கும் கால்சியம் குறைந்தால், ரத்தத்தில் கால்சியம் குறைய ஆரம்பிக்கும். இதனால்,பாரா தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்து, எலும்பில் இருக்கும் கால்சியத்தை எடுத்து ரத்தத்தில் கலக்கும். இதனால், எலும்பில் கால்சியம் அளவு குறைய ஆரம்பிக்கும். 
ஆஸ்டியோமலேசியா என்ற எலும்பு பாதிப்பு வரலாம். குழந்தைகளுக்கு, ரிக்கெட்ஸ் எனும் எலும்பு வளையும் பிரச்னை ஏற்படலாம். பாரா தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரப்பது, ஹைப்போ தைராய்டிசம் எனப்படும். 

ஆட்டோ இம்யூன் காரணமாக, பாரா தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரந்து, எலும்பிலுள்ள கால்சியம் அதிகமாக வெளியேறும். இதனால், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகவும், எலும்பில் குறைவாகவும் இருக்கும். ஆஸ்டியோ போரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைவு நோய் வரும். சிறுநீரகத்தில் கால்சியம், உப்பு தேங்கி சிறுநீரக கற்கள் உருவாகும். வயிற்றில் அமிலத் தன்மை அதிகரித்து, பெப்டிக் அல்சர் வரும். பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு பாரா தைராய்டு பாதிப்பு வராமல் தடுப்புதே. ஒரு வேளை பாரா தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்து கொள்வது நல்லது.