Asianet News TamilAsianet News Tamil

சமையலில் காரத்தை கூட்டும் கருப்பு மிளகு உங்கள் உடலின் ஆரோக்கியத்தையும் கூட்டும்…

Black pepper in the cooking powder will add to your bodys health
black pepper-in-the-cooking-powder-will-add-to-your-bod
Author
First Published May 1, 2017, 1:25 PM IST


உணவில் காரத்தை கூட்டவும், கூடுதல் சுவையை ஏற்படுத்தவும் கருப்பு மிளகு பயன்படுகிறது. ஆனால், எளிமையான இந்த மசாலாவை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல மருத்துவ காரணங்களுக்காக நம் முன்னோர்கள் உணவுகளில் பயன்படுத்தினர்.

மிளகு என்றால் பொதுவாக சிறியவர்களும், சில பெரியவர்களும் முகம் சுளிப்பர். ஆனால், இதில் இவ்வளவு நன்மைகள் இருக்குனு தெரிஞ்சா நீங்கள் சாப்பிடுவது மட்டுமல்லாமல் உங்க தோழர், தோழிகளுக்கும் கட்டாயம் பரிந்துரை செய்வீர்கள்.

க. புற்றுநோயை தடுக்கும்

1.. மார்பக புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் இருக்க கருப்பு மிளகு உதவுகிறது. மிளகில் உள்ள பப்பெரைன் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

2.. இதனை மஞ்சளுடன் கலக்கும்போது, அதன் புற்று எதிர்ப்பு குணங்கள் இன்னமும் அதிகரிக்கும்.

3.. பப்பெரைன்னை தவிர கருப்பு மிளகில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ப்ளேவோனாய்டுகள், கரோடீன்கள் மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளன. இவைகள் தீமையை விளைவிக்கும் இயக்க உறுப்புகளை நீக்கி, உடலை புற்றுநோய் மற்றும் இதர நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

4.. சரும புற்று மற்றும் குடல் புற்று வளர்வதை தடுப்பதிலும் கூட இது பெரிதும் உதவுகிறது.

5.. எனவே உணவுகளில் தினமும் ஒரு டீஸ்பூன் மிளகு பொடியை சேர்த்திடுங்கள். சமைக்கும்போது அதனை உணவில் சேர்ப்பதை விட, அதை அப்படியே சாப்பிடுவது தான் சிறந்தது.

உ. செரிமானத்திற்கு உதவும்

1.. கருப்பு மிளகில் உள்ள பப்பெரைன் செரிமானத்திற்கு பெரிதும் உதவி புரியும். வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அதிகமாக சுரக்க தூண்டுகோலாக விளங்குகிறது கருப்பு மிளகு.

2.. இந்த அமிலம் வயிற்றில் புரதம் மற்றும் இதர உணவுகள் செரிமானமாக உதவும். இந்த உணவு வகைகள் சரிவர செரிமானமாகாமல் போனால் வயிற்றுப் பொருமல், செரிமானமின்மை, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டியை உண்டாக்கும்.

3.. அதிகப்படியாக உற்பத்தியாகும் இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கும். செரிமானத்தை சீராக்க, சமைக்கும் போது உணவில் ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகை சேர்த்துக் கொள்ளுங்கள்.

4.. அது சுவையை கூட்டுவதுடன், வயிற்றையும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.

ங. உடல் எடை குறைய உதவும்

1.. கருப்பு மிளகு உணவை செரிக்க(ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்தல்) வைப்பதிலும் பெரிதும் உதவும். மேலும் அதன் வெளிப்புறத்தில் உள்ள ஆற்றல் மிக்க பைட்டோ-நியூட்ரியன்ட் ஊக்கி கொழுப்பு அணுக்களை உடைத்தெறியும்.

2.. இது வியர்வை மற்றும் சிறுநீர் கழிக்கும் அளவையும் அதிகரிக்க உதவும். இதனால் அதிகப்படியான நீர் வெளியேறுவதால், உடலில் இருந்து நச்சுப் பொருட்களும் வெளியேறும். இவையனைத்தும் கூட்டாக சேர்ந்து, உடல் எடை குறைய துணை புரியும்.

3.. ஆகவே உடல் எடை குறைய தினமும் உண்ணும் உணவில் கொஞ்சம் மிளகு பொடியை தூவி கொள்ளுங்கள். அதிகப்படியாக அதை சேர்க்கக்கூடாது. அது வேறு விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

ச.. வாயு பிரச்சனை நீங்கும்

1.. வாயு உருவாகுவதை தடுக்கும் பொருளான கார்மிநேடிவ் கருப்பு மிளகில் உள்ளதால் வாய்வு, வயிற்று பொருமல் மற்றும் வயிற்று வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். எனவே உணவில் மிளகாய்க்கு பதிலாக மிளகை சேர்த்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

ரு. சருமத்தை தூய்மையாக்கும்

1.. உடலில் இருந்து வியர்வை மற்றும் நச்சுப் பொருட்கள் வெளியேற கருப்பு மிளகு உதவுவதோடு நிற்காமல், அழுக்கு நீக்கியாகவும் உதவுகிறது.

2.. மிளகை அரைத்து முகத்திற்கு தடவும் ஸ்க்ரப்புடன் சேர்த்து முகத்தில் தடவினால் இறந்த செல்களை நீக்கி, இரத்த சுற்றோட்டத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு அதிக ஆக்சிஜனும் ஊட்டமும் அளிக்கும்.

3.. மேலும் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சருமத்தை பருக்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கும்.

சா. அடைத்த மூக்கை சுத்தப்படுத்தி சளியை நீக்கும்

1.. கருப்பு மிளகில் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் உள்ளதால், சளி மற்றும் இருமலை குணப்படுத்த அது பெரிதும் உதவும். கதகதப்புடன் காரசாரமாக இருப்பதால், சளியை நீக்கி அடைபட்டிருக்கும் மூக்கிற்கு நிவாரணியாக விளங்கும்.

2.. அதற்கு அரைத்த மிளகை ரசம் அல்லது சூப்பில் சேர்த்து குடியுங்கள். இது உடனடியாக சளியை நீக்கி சுலபமாக மூச்சு விட செய்யும்.

எ. பசியின்மையை போக்கும்

1.. கருப்பு மிளகு செரிமானத்தை மேம்படுத்தி சுவை அரும்புகளை ஊக்குவிப்பதை அறிவோம். இந்த குணத்தால் பசியின்மையால் தவிப்பவர்களுக்கு மிளகு ஒரு இயற்கை மருந்தாக விளங்குகிறது.

2.. உணவில் சிறிதளவு மிளகை சேர்த்துக் கொண்டால் போதும். அது பசியின்மை பிரச்சனையை நீக்கும்.

3.. ஊட்டச்சத்துக்களை உடல் திறமையாக பயன்படுத்த உதவும்

4.. உடலில் உள்ள மருந்து இருப்பை அதிகரிக்க கருப்பு மிளகின் குணங்கள் உதவுகிறது. அப்படியென்றால் உணவில் இருந்து வரும் ஊட்டச்சத்துக்களை உடலில் சரியாக பயணிக்க செய்து ஈர்த்துக் கொள்ள உதவும்.

5.. இந்த குணம் மருந்து சரியாக வேலை செய்யவும் துணை நிற்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios