Benefits of eating fish and some of the problems caused by them are a ...

மீன்

நன்மைகள்

விஞ்ஞானிகளும், சூழலியல் ஆய்வாளர்களும் மீன்கள் தவிர்க்கக்கூடாத ஒரு உணவு என்று சொல்கிறார்கள். அனிமல் புரோட்டின் என்கிற மாமிச புரதச் சத்து மீன்களில் அதிகம் கிடைக்கிறது.

தவிர, மிகக் குறைந்த கொழுப்பே மீன்களில் இருக்கிறது. நிறைய வகை மீன்களில் இருதயத்தைப் பாதுகாக்கும் ஒமேகா 3 இருக்கிறது.

ஹார்வர்ட் நர்ஸஸ் ஹெல்த் ஸ்டடி தொடர்ந்து மூன்று தலைமுறைகளாக 80,000 பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஒரு வாரத்திற்கு மூன்று, நான்கு ஆண்டுகள் மீன்களைச் சாப்பிட்டு வரும் பெண்களுக்கு இருதய நோய்கள் 30 சதவிகிதம் குறைவதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தீமைகள்

இந்தியாவில் கிடைக்கிற பெரும்பாலான மீன்கள் மோசமான தண்ணீரில் வாழ்கின்றன. இதனால் அவற்றில் பாதரசம் என்கிற நச்சுப்பொருள் கலந்து இருக்கிறது. இது மூளைக்கு பாதிப்பை உருவாக்கும். கூடவே மீன்களில் இருக்கிற றிசிஙி என்கிற ‘பாலிகுளோரினேட் பைபினைல்ஸ்’, கான்ஸர் உருவாக்கும் சக்தி கொண்டது.

‘குழந்தைகள், கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்கள் போன்றவர்கள் இப்படி பாதரசம் கலந்த மீன்களைச் சாப்பிட்டால் மூளை பாதிக்கப்படும்.

கர்ப்பத்தில் இருக்கும்போது இம்மாதிரி மீன்களைச் சாப்பிடும் குழந்தைகள், வளர்ந்ததும் மொழி கற்றுக் கொள்வதில், ஞாபகசக்தியில், சுறுசுறுப்பில் தடுமாறுகிறார்களாம்.

தீர்வு

மீன்களில் கெடுதல் செய்யும் நச்சுக்கள் அவை வளர்க்கப்படுகிற அல்லது பெறப்படுகிற இடங்களின் மாசுக்களால் மட்டுமே உருவாகிறது. மீன் எந்த விதத்திலும் கெடுதல் இல்லை. நல்ல இடத்தில் இருந்து பெறப்படுகிற மீன்களை வாங்குங்கள்.

ஒரே வகை மீன்களை திரும்பத் திரும்ப சாப்பிடாதீர்கள். இதனால் நச்சுப் பொருட்கள் கலந்த மீன் வகைகள் சாப்பிடுவது குறைக்கப்படும்.

கடல் வகை மீன்களில் பொதுவாக நச்சுப் பொருட்கள் குறைவாக இருக்கும் சால்மன், ஷிர்ப்ம், டுனா போன்ற வகைகள் நல்லது.