Benefits and disadvantages Parankikkay
பரங்கிக்காயில் அடங்கியுள்ள சத்துகள்
வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் உண்டு.
நன்மைகள்
குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும்.
பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரிய புஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது.
மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.
பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும்.
பல மற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளி களும் இதை சாப்பிட வேண்டாம்.
மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக் காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும்.
பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.
பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்ப தற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்
தீமைகள்
உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது.
இது சீரணம் ஆவதற்கு வெகுநேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது.
