being fasting in this day is very healthy

விரதங்களில் ஏகாதசி விரதம் மிகச் சிறந்த விரதமாகும். ஏன் ஏகாதசி விரதத்தை மட்டும் மிகச் சிறந்த விரதம் என்று சொல்கிறோம்? அதற்கான காரணம் என்ன?

பொதுவாக பெளர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பொழுது ஒரு நாளைக்கு 12 டிகிரி என்ற அளவில் விலகிச் செல்கிறது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

ஆனால், ஏகாதாசி தினத்தில் சுமார் 120 டிகிரிலிருந்து 132 டிகிரியில் இருக்கும் அப்பொழுது பூமி, சூரியன், சந்திரன் ஆகியவை முக்கோண நிலையில் அமைகின்றன. இக்காரணத்தினால் ஏகாதசி விரதம் மிகச்சிறந்த விரதம் ஆகும்.

ஏகாதசி நாளில் சந்திரனின் ஈர்ப்பு பூமியில் அதிகமாக இருக்கும். இதனால் மனிதனின் உடல் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மனித உடலில் 80% தண்ணீர் நிறைந்து உள்ளதால் இப்பாதிப்பு சந்திரனின் ஈர்ப்பால் ஏற்படுகிறது.

அந்நாளில் நம்முடைய ஜீரண உறுப்புகள் சரிவர இயங்காமல் இருக்கும். அதனால் தான் அன்று உணவை ஒதுக்கி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் கூறினர்.

இந்நாளில் தியானம் செய்பவர்களுக்குச் சந்திரனின் ஆற்றல் நல்ல சக்தியைக் கொடுக்கும். அதனால் ஏகாதசி நாளில் விரதத்தோடு தியானமும் செய்து அதற்கான பலன்களை பெறுங்கள்.