புருவத்தை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு எளிய இயற்கை வழிகளை தினமும் பின்பற்றி வந்தால், புருவம் அடர்த்தியாக வளரும்.

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள சல்பர், இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே ஒரு துண்டு வெங்காயத்தை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது 5 நிமிடம் தேய்த்தால், விரைவில் புருவத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓர் முறையை தினமும் இரவில் செய்து வந்தால், ஒரே மாதத்தில் புருவங்கள் அடர்த்தியாகி இருப்பதைக் காணலாம்.

தேவையான பொருட்கள்:

விளக்கெண்ணெய் – 10 மிலி

ஆலிவ் ஆயில் – 10 மிலி

வெங்காய சாறு – 20 மிலி

ஆரஞ்சு ஜூஸ் – 20 மிலி

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த பௌலை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

இந்த கலவையை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி வர வேண்டும். இப்படி ஒரு மாதம் செய்து வந்தால், ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.