Asianet News TamilAsianet News Tamil

இரவில் தூக்கம் இல்லாமல் சிரமப்படுகிறீர்களா? இந்த மாற்றத்தை செய்தால் நன்றாக தூக்கம் வரும்...

Are you struggling without sleep at night? This change will make you sleep better ...
Are you struggling without sleep at night? This change will make you sleep better ...
Author
First Published Apr 2, 2018, 12:59 PM IST



கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நன்றாக தூங்குவது தான் மிகவும் நல்லது.  ஆனால் இவர்களுக்கு இரவு நீண்ட நேரமாகியும் தூக்கம் வராது.

இதன் காரணமாக மறுநாள் காலை சீக்கரம் எழுந்திரிக்க முடியாமல், சோம்பல் ஏற்படும். பின்னர் அலுவலகம் சென்றாலும் மந்தமான நிலையிலேயே உடல் இருக்கும். மனமும் சோர்வடையும். தூக்கம் வரவில்லை என்ற புலம்பலே இது போன்றவர்களிடம் அதிகம் கேட்கும்.

அப்படிப்பட்டவர்கள், தங்கள் வாழ்க்கை முறையை சிறிது மாற்றினால் இரவில் நன்றாக தூங்கலாம்.

தினமும் வேலை முடிந்த உடனேயே படுக்கைக்கு சென்று விடக்கூடாது. வீட்டிற்கு வந்த உடன், நன்றாக குளித்து, ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். 

‘டிவி’ மற்றும் கம்ப்யூட்டர்களை ஆப் செய்ய வேண்டும். அடுத்த நாள் அணிய வேண்டிய ஆடைகளை எடுத்து வைக்க வேண்டும். பின்னர், அடுத்த நாள் வேலையை திட்டமிட வேண்டும். 

பின்னர் சிறிது நேரம் மனதை அமைதிக்கு பாட்டு கேட்கலாம். அல்லது தியானம் செய்யலாம். 

இரவு உணவை சாப்பிட்ட உடனேயே தூங்க செல்லக்கூடாது. 60 முதல் 90 நிமிடங்கள் கழிந்த பின்னர் தூங்கச் சென்றால் தான் நன்றாக தூக்கம் வரும். இடைப்பட்ட நேரத்தில் வாழ்க்கை துணையுடன் சிறிது மனம் விட்டு பேசுங்கள். அன்றைய சுவாரஸ்சிய சம்பவங்களை பேசி மகிழுங்கள். இதனால் மனமும் ரிலாக்ஸாக இருக்கும். தூக்கமும் நன்றாக வரும்.

தூக்கம் வராமல் துன்பப்படுபவர்கள் 60 வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை ஒரு அறிவியலாளர் கண்டறிந்துள்ளார். விடியும்வரை தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுவதால் ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

இதை தவிர்க்கும் விதமாக 60 வினாடிகளில் எளிதாக உறங்க ‘4-7-8டெக்னிக்’ முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்சுறியல் நிபுணரான மருத்துவர் ஆண்ட்ரூவெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார். 

இதை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்தி வைத்து அமைதியாக இருக்க வேண்டும். 

பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக் காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமாக நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

இந்த முறையினால் 7 வினாடிகள் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்து நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகிறது. இது உடலை தளர்வடையச் செய்கிறது. மேலும், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறிவிடுகிறது. 

இந்த முறையின் மூலம் வெளியேறும் தேவையற்ற எண்ணங்களால் நிம்மதியான உறக்கம் வந்துவிடும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios