சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூட மாட்டார்கள். சிலருக்கு குறைவாக சாப்பிட்டாலும் கூட உடல் எடை கூடும். இதற்கு காரணம் அவரவர் உடல் வாகுற்றும் மரபணு ஆகும்.

சரியான டயட் மற்றும் உடல் பயிற்சிகளை மேற்கொண்டு ஃபிட்டாக இருக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அற்புத சூப் குடித்தால் இன்னும் ஃபிட்டாக இருக்கலாம். 

சூப் 1:

தேவையான பொருட்கள்

அரைத்த தக்காளி – ஒரு கப்

செலரி – ஒரு கட்டு

நறுக்கிய கேரட் – 3

மெல்லிய துண்டுகளாக வெட்டிய முட்டைக்கோஸ் – ஒன்று

பெரிய வெங்காயம் – 6

அரைத்த பச்சை பட்டாணி – 2 கப்

செய்முறை

எல்லா உணவுப் பொருட்களையும் ஒரு பானையில் ஒன்றாக மசாலாப் பொருட்கள் சேர்த்து போடவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். பத்து நிமிடங்கள் கழித்து, சூட்டை குறைத்துக் கொண்டு, காய்கறிகள் நன்கு வேகும் வரை ஸ்லிம்மில் வைக்கவும்.

இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் 10 கிலோ குறைக்கலாம்.

கொழுப்பை கரைக்கும் இந்த சூப்பை, தினமும் உங்கள் அன்றாட உணவுடன் சேர்த்து பருகுங்கள்.

இந்த சூப் பருகும் டயட் நாட்களில் ப்ரெட், பாஸ்தா, நூடுல்ஸ், வறுத்த உணவுகள், அதிக கொழுப்பு சத்து உடைய உணவுகள் மற்றும் மைதா உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

முக்கியமாக இந்த டயட் நாட்களில் கார்போனேட்டட் பானங்களை குடிக்க கூடாது. ஆல்கஹால் அருந்த கூடாது.

இந்த முறைகளை சரியாக பின்பற்றும் பட்சத்தில் நீங்கள் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

சூப் 2:

தேவையான பொருட்கள்

செலரி கொத்து – 5

தண்ணீர் – 6 கப்

எலுமிச்சை – 3

நறுக்கிய பார்ஸ்லி – 1 கப்

தயாரிக்கும் முறை

முதலில் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, பார்ஸ்லி, செலரி ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கல்லீரலை சுத்தம் செய்யும் பானம் தயார்.

பருகும் முறை
இந்த பானத்தை தினமும் மூன்று வேளை உணவு உட்கொள்ளும் முன் ஒரு சிறிய டம்ளர் பருக வேண்டும். இப்படி மூன்று நாட்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பின் வேண்டுமானால், மீண்டும் இந்த சிகிச்சையை 7 முதல் 10 நாட்கள் கழித்து பின்பற்றலாம்.

மேலும் குறிப்பாக இந்த சிகிச்சையைப் பின்பற்றும் போது, வயிறு நிறைய உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இது சுத்தம் செய்யும் சிகிச்சை என்பதால், குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.