நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்...

1.. கொழுப்புச்சத்து உடலுக்கு தேவையான ஒன்று. ஆனால் உடலுக்கு தேவைப்படாத கொழுப்பு சத்துக்கள் ரத்தக்குழாயில் சேர்ந்தால் மாரடைப்பு ஏற்படும். இதை தடுக்க வைட்டமின் ‘சி‘ நிறைந்துள்ள நெல்லிக்கனியை சாப்பிடலாம். நெல்லிக்காயில் உள்ள விதையை நீக்கிவிட்டு (இரண்டு நெல்லிக்காய்) மிக்ஸியில் போட்டு ஜூஸ் செய்து குடிக்கலாம். 

2.. கீல்வாதம், நரம்பு தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாக பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து குடிக்கலாம். 

3.. நெல்லிக்கனியை உலர்த்தி பொடியாக்கி உடம்பில் தேய்த்துக் குளித்தால் சொறி, தோல் சுருக்கம் நீங்கும். 

4.. உலர் நெல்லியை நீரில் போட்டு ஊற வைத்து கண்களை கழுவி வர கண் நோய்கள் குணமாகும்.

5.. வாய்ப்புண் குணமாக நெல்லி இலையை சிறிது எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து வாய் கொப்பளித்தால் போதும்.

6.. நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து நரை முடி மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து இளஞ்சூடான நீரில் தொடர்ந்து குளித்து வர நரை முடி மறையும். 

7.. நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி நன்கு ஊறியதும் குளித்தால் முடி நன்கு செழித்து வளரும் இதில் முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும். 

8.. நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப்போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும். நெல்லிச்சாறுடன் தேன் கலந்து குடிக்க சளி, தும்மல் நீங்கும்.

9.. பாலில் நெல்லிப்பொடியை கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய் விட்டு கலக்கி குடித்து வர கக்குவான் இருமல் குணமாகும். 

10.. நெல்லிச்சாறுடன் சந்தனம் அரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.