All this will happen if you eat the leaf carrot on an empty stomach in the morning ...

காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை சாப்பிட்டால்... 

கறிவேப்பிலை பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் மட்டுமே சேர்க்கப்படுகின்றது. கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலிற்கு பல நன்மைகள் கிடைக்கும்.

கறிவேப்பிலையில் விற்றமின் A, விற்றமின் B, விற்றமின் B2, விற்றமின் C,கல்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை காணப்படுகின்றன.

காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால் வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து அழகான இடையைப் பெறலாம்.

இரத்த சோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன் சிறிதளவு கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும். இதனால் இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக காணப்படும்.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரிக்கின்றது. இதனால் இதய நோயில் இருந்து பாதுகாக்கின்றது.

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால் முடி நன்கு கருமையாகவும் நன்கு நீளமாகவும் வளர்ச்சி அடையும்.

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால் கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்களும் வெளியேறும்.