மார்பு பகுதியில் வலி ஏற்படும்போது, நம்மில் பலரும் இதயத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று தான் நினைப்போம். ஆனால், மார்பு பகுதியில் தான் இதயமும், நுரையீரலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம். மேலும் மார்பின் ஒரு பக்கம் மட்டும் வலியை உணர்ந்தால், அதற்கு பல காரணங்கள் உள்ளன.

ஒரு பக்கம் மட்டும் மார்பு வலித்தால் இதெல்லாம் கூட காரணமாக இருக்கலாம்...

** எலும்பு முறிவு

மார்பு பகுதியின் ஒரு பக்கத்தில் மட்டும் வலி ஏற்படுவதற்கு, விலா எலும்புகளில் உள்ள சிறு முறிவு/காயங்கள் கூட காரணமாக இருக்கலாம்.

** குருத்தெலும்பு அழற்சி

விலா எலும்புகளில் உள்ள குருத்தெலும்புகளில் உள்ள அழற்சியின் காரணமாகவும் நெஞ்சு வலி ஏற்படலாம். சில நேரங்களில் மார்பு பகுதியில் உள்ள நரம்புகளில் உள்ள இறுக்கம் அல்லது காயங்களாலும் நெஞ்சு வலி ஏற்படலாம்.

** புற்றுநோய்

குறிப்பிட்ட வகையான புற்றுநோயான நுரையீரல் புற்றுநோய் இருந்தாலும், மார்பு பகுதியின் ஒரு பக்கத்தில் வலி ஏற்படும். ஆகவே புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை கைவிட்டு, உடனே மருத்துவரை அணுக வேண்டும்

** வைரஸ் தொற்றுகள்

வைரஸ் தொற்றுகள் வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் கொப்புள புண்களும் மார்பின் ஒரு பகுதியில் மட்டும் வலியை உண்டாக்கும். சில நேரங்களில், நுரையீரலில் இரத்தத்தின் அளவு குறைவாக செல்லும் போதும், இம்மாதிரியான வலியை சந்திக்க நேரிடும்.

** மார்பு தசைகளுக்கு கொடுக்கப்படும் கஷ்டம்

மிகவும் கனமான பொருட்களைத் தூக்கினாலோ அல்லது வெயிட் லிப்ட்டிங் பயிற்சியை மேற்கொண்டாலோ, மார்பு பகுதியில் உள்ள தசைகள் அதிக கஷ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டு, மார்பு பகுதியில் வலியை உண்டாக்கும்

** தொற்றுகள்

காசநோய், நிமோனியா போன்ற தொற்றுகள் இருந்தாலும், மார்பின் ஒரு பக்கத்தில் வலியை சந்திக்கக்கூடும். மேலும் சுவாசக் குழாயில் அழற்சி இருந்தாலும் மார்பு பகுதியில் வலி ஏற்படும்

** அதிகப்படியான அமில சுரப்பு

அதிகப்படியான அமில சுரப்பும் செரிமான பிரச்சனைகளுள் ஒன்றாகும். ஆனால் இது நெஞ்செரிச்சல் மற்றும் மார்பு பகுதியில் வலியையும் உண்டாக்கும். எனவே மார்பு பகுதியில் வலியை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, உங்களுக்கு இருக்கும் உண்மையான பிரச்சனையை அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்