Agathi keerai cures ulcer

அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.

குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் குணமாகும்.

அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும்.

ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.

அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைகளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி 100 மி.லி. அளவு என 2 வேளை குடித்து வர காய்ச்சல், கை கால், மார்பு, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.

இக்கீரையைப் பிழிந்து அதன் சாறை இரண்டு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.

அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும் ஒரு வேளை குடிக்கலாம்.