Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? தினமும் ஊதுபத்தியை பயன்படுத்துவது நம்முடைய இதயத்திற்கு மிகவும் ஆபத்து...

Agarbathi is more danger for heart
Agarbathi is more danger for heart
Author
First Published Mar 16, 2018, 1:15 PM IST


 

பொதுவாக அனைவரது வீட்டிலும் கடவுளை வணங்கி தொழுவதற்கு, வீட்டில் நறுமணம் வீசுவதற்கும் ஊதுபத்தி ஏற்றும் பழக்கம். ஆனால் பல மலர்களின் வாசனைகள் கிடைக்கும்  இந்த ஊதுபத்தியில், ரசாயனப் பொருட்கள் அதிகமாக கலந்திருப்பதால், அது நமது உடல்நலத்திற்கு பல வகையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஊதுபத்தியின் மூலம் நமது உடல் நலத்திற்கு எவ்விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது தெரியுமா?. 

** வீட்டில் ஊதுபத்தி பயன்படுத்துவதால், காற்றில் கார்பன் மோனாக்சைடு கலக்கிறது. இதனால் காற்று மாசுபாடு அடைகிறது. இதனை நாம் சுவாசிக்கும் போது, நமது நுரையீரல் பகுதியில் அழற்சி மற்றும் சுவாச கோளாறுகள், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

** ஊதுபத்தி குச்சிகளில், கந்தக டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மற்றும் ஃபார்மல்டிஹைடை ஆக்சைடுகள் போன்றவற்றின் கலப்புகள் அதிகமாக இருக்கிறது. இது நமது நுரையீரலில் அடைப்பௌ உண்டாக்கி, ஆஸ்துமா பிரச்சனை ஏற்படுத்துகிறது.

** வெகுநாட்கள் வரை இருக்கும் ஊதுபத்திகளை வைத்து இருந்து அதை பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்து வரும் புகையானது, நமது மென்மையான சருமத்தோடு ஊடுருவும் போது தலைவலி, அரிப்பு மற்றும் சரும அழற்சிகளை ஏற்படுத்துகிறது.

** நாம் தினமும் அளவுக்கு அதிகமாக நம்முடைய வீட்டில் ஊதுபத்தியை பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த புகை நமது உடலின் நுரையீரலை சிதைத்து புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது.

** தினந்தோறும் ஊதுபத்தியை பயன்படுத்துவது நம்முடைய இதயத்திற்கு எதிர்வினை விளைவுகளை உண்டாக்குகிறது. மேலும் இது நமது இரத்த நாளங்களில் அழற்சிகளை உருவாக்குகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios