கடுமையான வாக்குவாதத்துக்கு பிறகு மனதை அமைதியடையச் செய்யும் 5 வழிகள்..!!
ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு மனதை அமைதியாக்க என்ன செய்யலாம், என்பது குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஒருவருடன் வாக்குவாதம் செய்வதனால் மட்டும் எந்த பிரச்னையும் தீர்ந்துவிடாது. நம்முடைய மனம் தான் அமைதியை இழந்து பதற்றமாகி வேதனை அடையும். வாக்குவாதம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமே மாற்றுக் கருத்து தான். நம்மைப் போன்றே மற்றவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கும் என்பதை நீங்கள் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்வது சற்று கடினம் தான். ஆனால் அதுதானே உண்மை. பொதுவாக வாக்குவாதம் ஏற்படும் போது, அதை உணர்வுடன் தொடர்புப்படுத்தி பாருங்கள். இதன்மூலம் உங்களுடைய பகுத்தறிவு விசாலமடையும். அப்போது ஒருவருடன் நீங்கள் நடத்திய வாக்குவாதத்தை நினைத்து வருத்தமடைவீர்கள். இதை தவிர்க்க நீங்கள் நல்லறிவைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு மனதை அமைதியாக்க என்ன செய்யலாம், என்பது குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
நன்றாக குளியுங்கள்
ஒருவருடன் வாக்குவாதம் கொண்ட பிறகு, உங்களுடைய மனம் அமைதி அடையாமல் இருந்தால் போய் ஒரு குளியலை போடுங்கள். அதுவும் ஷவர் இருந்தால் நல்லது தான். அப்போது வாக்குவாதம் தொடர்பாக நடந்த கருத்துமோதல், வாதத்தில் நீங்கள் செய்த தவறு, எங்கே மனம் புண்படும் வகையில் பேச நேர்ந்தது உள்ளிட்டவற்றை அசைபோடுங்கள். அப்போது மனதில் ஒரு அமைதி பிறக்கும். அதை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட வேண்டிய மறு பிரவேசங்கள் குறித்து முடிவு செய்யலாம்.
விரும்பியதை சாப்பிடுங்கள்
மனம் அமைதி அடையாமல் இருந்தால் உங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்து வாங்கி வந்து சாப்பிடுங்கள். இல்லையென்றால் நீங்களே வெளியே சென்று பிடித்த கடையில் ஆர்டர் செய்து சாப்பிடலாம். பிடித்த உணவை சாப்பிடும் போது மனம் ஆறுதல் பெறுகிறது. ஒருவேளை நடந்த முடிந்த வாக்குவாதத்தினால் உங்களுக்கு குற்ற உணர்ச்சி இருந்தால், அது சாப்பிடும் போது மறந்துபோகும். சாப்பிடும் போது பிடித்த படத்தை பார்ப்பது, நல்ல இசையை கேட்பது போன்றவை மனதை மேலும் அமைதியடையச் செய்யும்.
சமரசம்
எப்படியிருந்தாலும் இருகட்சிக்கு இடையில் சமரச உடன்படிக்கை ஏற்பட செய்யும். அதை நீங்களே ஏன் முன்னெடுக்கக்கூடாது. நாம் என்ன தவறு செய்தோம்? வாக்குவாதம் செய்த நபர் தரப்பில் இருந்த தவறு என்ன? உள்ளிட்ட விஷயங்களை சிந்தியுங்கள். மேலும் நடந்து முடிந்த வாக்குவாதத்தை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். மற்றவர் தவறு செய்யவில்லை என்பதை நீங்கள் கண்டுப்பிடித்தால், நீங்களே சமரச நடவடிக்கையை முன்னெடுக்கலாம். அதை தொடர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம்.
லிவ்-இன் உறவில் எல்லைகளை அமைப்பது எப்படி..?
ஈகோ வேண்டாம்
உங்கள் ஈகோவை சற்று ஒதுக்கி வையுங்கள். வெறுப்பைத் தாங்கிக் கொண்டே வாழ முடியாது. உங்கள் எண்ணங்களைத் திட்டிய நபரை, நீங்கள் சமாதானமாக பேசுங்கள். அவர் தான் தப்பு செய்தவர், அவர் தான் சமரசத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிற தொனியில் எதையும் முடிவு செய்ய வேண்டாம். இரண்டு தரப்புகளில் ஒருவருக்கு நிலைமை தெரியவந்தால், எந்தவித ஈகோவும் பார்க்காமல் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் செயலாற்றுங்கள்.
நடை பயிற்சியின் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க..!!
”சண்டை முடிந்தது” என்பது தான் முக்கியம்
நீங்கள் எதையும் அர்த்தப்படுத்த முயற்சிக்க வேண்டாம். அதை செய்து தான் இருவருக்குமிடையில் வாக்குவாதம் உருவாகியுள்ளது. அதனால், வாக்குவாதத்துக்கு பிறகான நடவடிக்கைகளை உங்களுடைய இருதயத்தில் இருந்து சிந்திக்க முயற்சி செய்யுங்கள். அதை தொடர்ந்து உங்களுடைய நடவடிக்கை மீது உங்களுக்கே விமர்சனம் வரும். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், அந்த வாதத்தைப் பற்றி நீங்கள் நினைவில் கொள்வதற்கு பதிலாக, பிரச்னை எப்படி முடிவுற்றது என்பதில் உங்களுடைய நிலைபாடு மாறும்.