A body pain that causes diseases

பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை உடல் வலி. பொதுவாக இந்த உடல் வலியானது ஒருசில கடுமையான எடை கொண்ட பொருட்களை நீண்ட நேரம் தூக்குவதாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை மேற்கொள்வதாலோ சந்திக்க நேரிடும்.

ஆனால், சில நேரங்களில் இந்த உடல் வலி சில நோய்களுக்கான அறிகுறியாகவும் உள்ளது.

தலை வலி, முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, தசை வலி போன்றவை பொதுவானவை.

மற்றொரு வித்தியாசமான வலி தான் நரம்புகளில் ஏற்படக்கூடிய வலி. இந்த வலியானது நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகள் பலவீனமடையும் போது ஏற்படும். இதற்கு நரம்புநோய் வலி என்று பெயர்.

உடல் வலி ஏற்பட்டால் இந்த நோய்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்…

எய்ட்ஸ்

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொடிய நோயான எய்ட்ஸ் இருந்தாலும், கடுமையான உடல் வலியை சந்திக்கக்கூடும்.

டாக்சோபிளாஸ்மோஸிஸ்

டாக்சோபிளாஸ்மோஸிஸ் ஒரு ஒட்டுண்ணி நோய். இந்த நோய் பெரும்பாலும் பூனைகளின் மூலம் தான் பரவும். இந்த நோய் இருந்தாலும், நாள்பட்ட உடல் வலி உண்டாகும்.

பொட்டாசியம் குறைபாடு

உடலில் பொட்டாசியம் குறைபாடு இருந்தால், அடிக்கடி உடல் வலி ஏற்படும்.

டெங்கு காய்ச்சல்

டெங்கு வைரஸால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்படும் ஒரு வகையான காய்ச்சல் தான் டெங்கு காய்ச்சல். இந்த காய்ச்சல் இருந்தால் மூட்டு வலி, தசை வலி மற்றும் தலை வலி ஏற்படும்.

நாள்பட்ட மூட்டுவலி

நாள்பட்ட மூட்டுவலிகள் என்பது மூட்டுகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, அதனை அசைக்க முடியாத அளவில் வலியை உண்டாக்குவதாகும். இந்த நோய் வந்தால், உடலில் உள்ள மூட்டுகளில் தாங்க முடியாத அளவில் வலி ஏற்படும்.

இரைப்பை குடல் அழற்சி

பொதுவாக உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். ஆனால் இரைப்பை குடல் அழற்சி இருந்தால், அத்துடன் உடல் வலியும் ஏற்படும்.

லூபஸ் (Lupus)

இது ஒரு கொடிய நோய். ஏனெனில் பொதுவாக உடலில் கிருமிகளை எதிர்த்துப் போராடும் செல்கள், உடலில் உள்ள நல்ல செல்களை அழிக்க ஆரம்பிக்கும். இவ்வாறு அழிக்க ஆரம்பிக்கும் போது, உடலில் பல பிரச்சனைகளுடன், அளவுக்கு அதிகமான மற்றும் கடுமையான உடல் வலியை சந்திக்க நேரிடும்.

புற்றுநோய்

காரணமின்றி அளவுக்கு அதிகமாக உடல் வலி இருந்தால், அது புற்றுநோய்க்கான அறிகுறியாகும். ஏனெனில் புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவதால், அவை கடுமையான வலியை உண்டாக்குகின்றன.

காசநோய்

காசநோயானது ஒரு தொற்றுநோய். இந்த நோய் வந்தால் கல்லீரலானது அளவுக்கு அதிகமாக பாதிக்கப்படும். மேலும் ஆய்வு ஒன்றிலும், கடுமையான இருமலுடன், நாள்பட்ட உடல் வலியும் இருந்தால், அது காசநோய்க்கான முக்கியமான அறிகுறிகளுள் ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம்

தற்போது மன அழுத்தத்தினால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு கடுமையான தலை மற்றும் தசை வலியுடன், சோர்வு, தூக்கமின்மை, அத்துடன் சில நேரங்களில் மார்பு வலியும் ஏற்படும்.

ஆர்த்ரிடிஸ்

உடல் வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் முதன்மையானவை ஆர்த்ரிடிஸ். எப்படியெனில் ஆர்த்ரிடிஸ் வந்தால், குறுத்தெலும்புகளில் தோய்வு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி, கடுமையான வலியை உண்டாக்கும். மேலும் இந்த ஆர்த்ரிடிஸ் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அது சிறியவராக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி.

நீரிழிவு

நீரிழிவு நோய் இருந்தால், அடிவயிறு மற்றும் கால்களில் கடுமையான வலி ஏற்படும். இவ்வாறு நீரிழிவு நோயால் ஏற்படும் வலியை கட்டுப்படுத்த, சரியான மருந்துகள் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

மலேரியா

கொசுக்களால் ஏற்படும் மலேரியா என்னும் தொற்றுநோயின்காரணமாகவும் உடல் வலி ஏற்படும். அதிலும் மலேரியா தான் உள்ளது என்று எளிதில் அறியும் வகையில், உடலில் கடுமையான வலியை
உணரக்கூடும்