Health tips: சர்க்கரை நோய்; பேர் இனிப்பா இருந்தாலும் கசப்புதான்; என்ன சாப்பிடலாம் - ஹெல்த் டிப்ஸ்!!

நீரிழிவு நோய் என்பது இன்றைக்கு பெரும்பாலானவர்களை பெரிதும் பாதிக்கிறது. உண்ணும் உணவில் இருந்து பருகும் பானம் வரைக்கும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியுள்ளது. ஆசைப்பட்டு எதையாவது குடித்தால் அப்புறம் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி கால் எரிச்சல் போன்றவை பாடாய் படுத்தி விடும். காபி, டீ, கார்ப்பனேட் பானங்களை குடிப்பதை விட சத்தான, அதே நேரத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பானங்களை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

5 tips for healthy food and drinks with diabetes

என்ன சாப்பிடக்கூடாது:
தேன், வெல்லம், பனை வெல்லம் கலந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. உப்பு அதிகம் உள்ள ஊறுகாய், கருவாடு, வத்தல், அப்பளம் போன்றவைகளை சாப்பிடக்கூடாது. கஞ்சி மற்றும் பழச்சாறுகள் போன்ற எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அவை விரைவில் செரிமானம் ஆகி பசியை தூண்டும். பழங்களை ஜூஸ் ஆக குடிப்பதை விட கடித்து சாப்பிடுவதே நல்லது. செயற்கை குளிர் பானங்களில் சர்க்கரை அதிகம் உள்ளதால் அவற்றை உட்கொள்ளக் கூடாது. வறுத்த உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது.  

என்ன சாப்பிடலாம்:
ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை,  கொய்யா, பேரிக்காய், நெல்லிக்காய் போன்ற பழங்கள் அனைத்தையும் உண்ணலாம்.
பெரும்பாலான காய்கறிகள் ஆரோக்கியமானவை என்றாலும், உருளைக்கிழங்கு மற்றும் கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்தவை தவிர்க்கப்பட வேண்டும். பீட்ரூட் மற்றும் கேரட் போன்றவற்றிலும் சர்க்கரையின் அளவு இருப்பதால் தவிர்க்க வேண்டும். பேரீச்சம்பழம், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றில் சர்க்கரை அதிகம் உள்ளதால் அவற்றை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பல் கூச்சத்தால் அவதிப்படுறீங்களா? ரெண்டு மூணு இலை மட்டும் போதும் டக்குனு குணமாகும்!

தண்ணீர், எலுமிச்சை பானகம்:
சர்க்கரை நோயாளிகள் நிறைய தண்ணீர் குடிக்கலாம். இதன் மூலம் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்படும். எலுமிச்சை பானம் எளிமையான குளிர்பானம். சர்க்கரை சேர்க்காத சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்கலாம்.

காய்கறி சூப்:
நீரிழிவு நோயாளிகள் தேங்காய் தண்ணீர், இளநீர் குடிக்கலாம். உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்கும். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். காய்கறி சூப் செய்து சாப்பிடலாம். சிறிதளவு உப்பு மட்டுமே சேர்ப்பது நல்லது. மோர் நிறைய குடிப்பது நல்லது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நீரிழிவு நோயாளிகளுக்கு மோர் சிறந்த பானம்.

Cardamom Benefits: ஏலக்காய்; அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் அருமருந்து நரம்பு பிரச்சினை எட்டிக்கூட பார்க்காது!

அசைவ உணவுகள்:
நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒருமுறை வேகவைத்த நாட்டுக்கோழி சாப்பிடலாம். முட்டையின் வெள்ளைக்கரு வாரத்திற்கு 3 முறை சாப்பிடலாம். குழம்பு மீன் சாப்பிடலாம். அதே நேரத்தில் வறுத்த சிக்கன், மட்டன் வகைகளை தவிர்ப்பது நல்லது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios