பல் கூச்சத்தால் அவதிப்படுறீங்களா? ரெண்டு மூணு இலை மட்டும் போதும் டக்குனு குணமாகும்!
Teeth Care Tips : பற்களில் கூச்சம் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் பெற, சில வீட்டு வைத்தியங்களை மட்டும் பின்பற்றினால் போதும். விரைவில் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
பற்கள் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. இதன் காரணமாக, குளிர்ந்த மற்றும் சூடான உணவுகளை சாப்பிட முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். உணர்திறன் வாய்ந்த பற்களை கொண்டிருப்பது, சில நேரங்களில் மிகவும் சங்கடமாகவும், மோசமாகவும் உணர வைக்கிறது. மிகவும் உணர்திறன் வாய்ந்த பற்கள் பலவீனமான ஈறுகளால் தான் ஏற்படுகின்றது.
நம்முடைய தவறான உணவு பழக்கத்தால், ஒவ்வொரு ஐந்து பேரில் இரண்டு அல்லது மூன்று பேர் இந்த பிரச்சனையை சந்திக்கின்றோம். துரித உணவுகள் மற்றும் வெளிப்புற உணவுகளில் ஏதேனும் ஒரு வடிவில் அதிக அமிலம் உள்ளது. இது பற்களை சேதப்படுத்தும். இத்தகைய உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் பற்கள் கூச்சப்படும் பிரச்சனை வேகமாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி பல நேரங்களில் பற்களை தவறான முறையில் துவக்குவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதற்காக நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக சில வீட்டு வைத்தியங்களை மட்டும் பின்பற்றினால் போதும். இந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் விரைவில் விடுபடலாம். எனவே, பல் கூச்சத்தை போக்கக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இப்போது இந்த கட்டுரைகள் நாம் பார்க்கலாம்.
இதையும் படிங்க: பற்கள் பளபளக்க இந்த 3 இலைகளை மென்று சாப்பிடுங்க...அது என்ன தெரியுமா?
பல் கூச்சத்தை போக்க சிறந்த வழிகள்:
1. ஆயில் புல்லிங்:
ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத முறையாகும். இதற்கு நீங்கள் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை சுற்றி எண்ணெய் தடவி வாய் கொப்பளிக்கும் முன் அல்லது துப்புவதற்கு முன் எண்ணையால் புல்லிங் பண்ண வேண்டும். இவ்வாறு செய்வது மூலம் பல் கூச்சத்தில் இருந்து விடுபடலாம். நல்லெண்ணெய் ஈறு தொடர்பான பிரச்சனைகளை குறைக்கவும். தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பது பற்களில் அழுக்கு குறைவதை தடுக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக பற்களில் கூச்சம் இருக்காது. ஏனெனில், பல் கூச்சத்திற்கு பற்களில் இருக்கும் அழுக்குகள் பெரும்பாலும் காரணமாகும்.
2. கொய்யா இலைகள்:
உங்களுக்கு பல் கூச்சப் பிரச்சனை இருந்தால் நீங்கள் இரண்டு அல்லது மூன்று கொய்யா இலைகளை மென்று சாப்பிடுங்கள். கொய்யா இலைகள் பல் கூச்சம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. கொய்யா இலையில் வலி நிவாரணி, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளது. இது பல் உணர்திறன் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
இதையும் படிங்க: பல் துலக்கும் போது ஈறுகளில் இரத்தம் வருகிறதா..? காரணம் தெரியுமா..?
3. பூண்டு:
பற்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் பல் சொத்தை மற்றும் பல் சிதைவை ஏற்படுத்தவும், பல் கூச்சம் மற்றும் வலியையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவே இந்த பிரச்சனையே போக்க பூண்டு சாப்பிடுங்கள். ஏனெனில், பூண்டில் மக்னீசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் தாமிரம் ஆகியவை நிறைந்துள்ளது. இரண்டு அல்லது மூன்று பல் பூண்டுகளை மென்று சாப்பிட்டால் அல்சிலின் என்ற கலவை உருவாகிறது. இது நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது பாக்டீரியாவை கொல்ல பெரிதும் உதவுகிறது.
4. மஞ்சள் தூள்:
மஞ்சள் என்பது வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு மசாலா பொருளாகும். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் மறைந்துள்ளது. மருத்துவ பயன்கள் தரும் மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு மஞ்சள் தண்ணீரில் பேஸ்ட் போல் கலந்து, அந்த பேஸ்ட்டை டூத் பிரஷ் மூலம் பற்கள் மற்றும் ஈறுகளில் நன்கு தடவி, சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு, பிறகு வாயை தண்ணீரால் கழுவ வேண்டும். இதை செய்வதன் மூலம் பற்களில் வலி மற்றும் கூச்சம் குறையும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D