5 habits you should avoid before sleep

தூங்குவதற்கு முன் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் சில இருக்கின்றன. அந்த செயல்களை நாம் செய்வதால் நமது தூக்கம் பாதிக்கப்படக் கூடும். தூக்கம் பாதிக்கப்படுவதால் வீண் மன உளைச்சல், ஜீரணம் தொடர்பான பிரச்சனைகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம். இங்கு அது போன்று உறங்கும் முன் செய்யக்கூடாத, சில செயல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

தண்ணீரை குடிக்க கூடாது!

உறங்குவதற்கு முன்னர் அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாது. அவ்வாறு குடிக்கும் போது சிறுநீர் கழிக்க அடிக்கடி எழும்ப வேண்டி வரும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும். சிலர் தூங்கும் ஆர்வத்தில் சிறுநீர் கழிக்காமல் அடக்குவர். அவ்வாறு செய்வதால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே உறங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

குட்டித்தூக்கம் வேண்டவே! வேண்டாம்!

மதியம் உணவிற்கு பிறகு சிறிது நேரம் உறங்கும் பழக்கம் பொதுவாக சிலருக்கு உண்டு .இந்த பழக்கம் இரவில் நல்ல துக்கம் வராமல் தடுக்கும். மதியம் தூங்குவதால் இரவில் சரியான நேரத்திற்கு தூக்கம் வராமல், தூக்கமின்மை போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த குட்டி தூக்கம் உங்கள் உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகிவிடும். எனவே குட்டி தூக்கத்தை தவிர்த்திடுங்கள்.

செல்ஃபோன், கம்ப்யூட்டர் திரைகளை பார்க்காதீர்கள்!

தூங்க செல்லுவதற்கு முந்தைய நிமிடம் வரை கணினி திரையையோ, செல்ஃபோனையோ,பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கம், இன்றைய மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. அனால் அது மிகவும் தவறு. இதனால் கண்கள் சோர்வடைகின்றன. கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. மேலும் செல்ஃபோன் ஸ்க்ரீனில் இருந்து விழும் வெளிச்சம், முகத்தில் படுவதால் முகத்தில் தோல் சுருக்கம் எற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் இது போன்ற செயல்களால் மன அழுத்தம் ஏற்பட்டு உறக்கம் கெடலாம்.

உடற்பயிற்சி

தூங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்வது என்பது, ஒரு போதும் செய்யக் கூடாத காரியம். உடற்பயிற்சியில் ஆர்வம் மிக்க சிலர் நேரம் காலம் பார்க்காமல், உடற்பயிற்சியில் ஈடுபடுவர். அவ்வாறு செய்வது மிகவும் தவறு. உறங்குவதற்கு 3 மணி நேரம் முன்னதாக எந்த ஒரு உடற்பயிற்சியையும் செய்து முடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் உள்ள தசைகள் நன்கு ஓய்வெடுத்து கொள்ள முடியும்

உறங்கும் முன் காஃபி கூடவே! கூடாது!

உறங்குவதற்கு முன்னதாக காஃபி குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அவ்வாறி செய்வது மிகவும் தவறு. காஃபியில் இருக்கும் கஃபைன் மூளையை சுறுசுறுப்பாக இயங்க செய்யும். நாம் உறங்குவதே மூளை ஓய்வெடுத்துக்கொள்ள தான். அப்படி இருக்கையில் உறங்க செல்லும் முன் நாம் குடிக்கும் காஃபி, நமது தூக்கத்தையும் கெடுத்து மூளையையும் குழப்பிவிடும்.

தூங்குவதற்கு முன் முடிந்த அளவு மன அமைதியை கொண்டுவர வேண்டும். சிலர் கடவுளை வணங்குவதன் மூலம் அந்த அமைதியை பெறுவர். மெல்லிசை பாடல்கள் கேட்பது போன்ற செயல்கள் நல்ல நிம்மதியான தூக்கத்தை தரும்.

நல்ல எண்ணங்களுடன், நேர்மறையான சிந்தனையுடன் உறங்க செல்வது மன நிம்மதியை தரும். அன்று நடந்த விஷயங்களை மனதில் அசை போட்டபடி, நாம் செய்ததில் சரி எது? தவறு எது? எதை நாளை மாற்றி கொள்ள வேண்டும்? என சிந்தனை செய்தால், சிந்தனையின் பாதியிலேயே தூக்கம் வந்து உங்களை தழுவிவிடும்.