ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் காரணமாக பார்வையை இழந்த 30 வயது பெண்... வைரலாகும் மருத்துவரின் டிவீட்!!

திரையைப் பார்ப்பது நமது பார்வையை சேதப்படுத்தும் என்று நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், மருத்துவர் சுதிர் குமார் என்பவர் தனது ட்விட்டரில் நிஜ வாழ்க்கையில் ஒரு பெண் அதிக நேர ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் பார்வையை இழந்தது குறித்து பகிர்ந்திருந்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.

30 year old woman lost her sight due to smartphone vision syndrome and doctors tweet goes viral

திரையைப் பார்ப்பது நமது பார்வையை சேதப்படுத்தும் என்று நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், மருத்துவர் சுதிர் குமார் தனது ட்விட்டரில் நிஜ வாழ்க்கையில் ஒரு பெண் அதிக நேர ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் பார்வையை இழந்தது குறித்து பகிர்ந்திருந்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம்:

மருத்துவர் சுதிர் குமார், தனது டிவிட்டரில், 30 வயதான மஞ்சுவுக்கு ஒன்றரை ஆண்டுகளாக கடுமையான பார்வை குறைபாடு அறிகுறிகள் இருந்தன. அந்த பெண்ணின் வரலாற்றை ஆய்வு செய்த போது, அவருக்கு ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தினமும் பல மணிநேரம் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தினார், மேலும் விளக்குகள் அணைக்கப்பட்டு 2 மணி நேரத்திற்கும் மேலாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தியுள்ளார்.

நோய் கண்டறிதல்:

சில நொடிகள் அவரால் எதையும் பார்க்க முடியாத தருணங்கள் இருந்தன. இது பெரும்பாலும் இரவுகளில் அவள் கழிப்பறையைப் பயன்படுத்த எழுந்தபோது நிகழ்ந்தது. ஒரு கண் நிபுணரால் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக அந்த பெண் அழகுக்கலை நிபுணர் வேலையை விட்டுள்ளார். அதன் பிறகு தான் அவருக்கு அறிகுறிகள் தெரிந்துள்ளன. தினமும் பல மணிநேரம் தனது ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக இரவு நேரங்களில் 2 மணி நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!

ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் என்றால் என்ன?

ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் என்பது கணினிகள், ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்டுகளை நீண்டகாலமாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. இது கண்களின் பார்வை சக்தியை முடக்கிவிடும். இது கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் அல்லது டிஜிட்டல் விஷன் சிண்ட்ரோம் என்றும் அழைக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார். 

மருத்துவர் எழுதி கொடுத்த மருந்து…

மேலும் இதுக்குறித்து மருத்துவர் சுதிர், அந்த பெண்ணுக்கு ஆலோசனை அளித்து, அவர பார்வைக் குறைபாட்டிற்கான சாத்தியமான காரணத்தை விளக்கினார். மேலும் ஸ்மார்ட்போனின் பயன்பாட்டைக் குறைக்கும்படி அவருக்கு பரிந்துரைத்தார். நான் அவருக்கு அந்த மருந்துகளையும் பரிந்துரைக்கவில்லை என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: புற்று நோயில் இருந்து நம்மை காக்கும் "வேர்க்கடலை சட்னி"!

ஒரு மாதத்திற்குப் பிறகு பெண்ணின் பார்வை மேம்பட்டது:

ஒரு மாத மதிப்பாய்வில் அந்தப் பெண்ணின் பார்வைக் குறைபாடு போய்விட்டது. கடந்த 18 மாதங்களாக அவர் இந்த நோயால் அவதிப்பட்டு வந்தார். ஒரு மாத மதிப்பாய்வில், மஞ்சு முற்றிலும் நலமாக இருந்தார். 18 மாதங்களாக இருந்த பார்வைக் குறைபாடு நீங்கிவிட்டது. இப்போது, அவருக்கு சாதாரண கண்பார்வை இருந்தது. மேலும், இரவுகளில் ஏற்படும் கண் பார்வை இழப்பும் நின்று போனது என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார். 

இதுவரை 124.9 ஆயிரம்  பார்வைகளைப் பெற்றுள்ள இந்த நீண்ட ட்வீட்களை முடித்த மருத்துவர் சுதிர், டிஜிட்டல் சாதனங்களின் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதைத் தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். ஏனெனில் இது கடுமையான மற்றும் பார்வை தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 வினாடி இடைவெளி எடுத்து, 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளைப் பார்க்கவும் அவர் பரிந்துரைத்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios