Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!

வெண்ணெய் மூலம் கிடைக்கும் நெய்யில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் லாக்டோஸ் கிடையாது. அதுதவிர மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளான ஒமேகா-3 மற்றும் ஃப்யூட்ரிக் அமிலம் நிறைந்து காணப்படுகின்றன.
 

reason why ghee is said to be given to children
Author
First Published Feb 9, 2023, 3:53 PM IST

குழந்தை பிறந்து ஆறுமாதமாக இருக்கும் போது, தங்கள் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்கிற சந்தேகம் பெற்றோருக்கு எழும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் ஆரம்ப காலத்தில் அவசியம். நெய் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உணவு. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்த நெய், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் எடை அதிகரிப்புக்கும் உதவுகிறது.

ஊட்டச்சத்து மிகுந்த நெய்யில் லாக்டோஸ் கிடையாது. நெய்யில் அதிக அளவு வைட்டமின் ஏ, ஈ மற்றும் டி உள்ளது. இது தவிர, ஒமேகா-3 கொழுப்பும் காணப்படுகிறது. நெய் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எனவே குழந்தை திட உணவுகளை உண்ண ஆரம்பித்தவுடன் நெய் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு ஏழு மாதங்கள் ஆனவுடன், மூன்று முதல் நான்கு சொட்டு நெய்யை உணவில் சேர்க்கலாம். குழந்தைக்கு ஒரு வயது ஆனவுடன் ஒரு ஸ்பூன் நெய்யை குழந்தையின் உணவில் சேர்க்கலாம்.

நெய் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது மற்றும் வயிற்று பிரச்சனைகளைத் தடுக்கிறது. நெய் குழந்தைகளுக்கு நல்ல ஆற்றலையும் வழங்குகிறது. இதில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. முதல் ஐந்து வருடங்களில் குழந்தையின் மூளை வளர்ச்சி அடைகிறது. நெய் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் வளமான மூலமாகும். நெய் எடை அதிகரிக்க உதவுகிறது மற்றும் குழந்தையின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

பெயரில் தான் இது சின்ன வெங்காயம்- ஆரோக்கியத்தில் இது மிகவும் பெருசு..!!

வீட்டில் செய்த பசுவின் நெய் குழந்தைக்கு கொடுப்பது நல்லது. குழந்தையின் சருமத்தை மேலும் மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற நெய் கொண்டு மசாஜ் செய்வதும் நன்மையை பயக்கும். இதன்மூலம் குழந்தைகள் வேகமான வளர்ச்சி மற்றும் உடல் வலிமையை பெறுவார்கள். இனிப்புச்சுவை கொண்ட பலகாரங்களில் நெய் சேர்த்து கொடுப்பதை விடவும், பருப்பு மற்றும் சோற்றில் நெய் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பது மிகவும் நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios