Asianet News TamilAsianet News Tamil

குஜராத்தில் 6 மாதங்களில் 1,052 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் : மாநில அமைச்சர் பகீர் தகவல்..

குஜராத்தில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 1,052 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர்  என்றும், இறந்தவர்களில் 80 சதவீதம் பேர் 11-25 வயதுக்குட்பட்டவர்கள் என்று அம்மாநில கல்வி அமைச்சர் குபேர் திண்டோர் தெரிவித்துள்ளார்.

1052 die of heart attack in 6 months in Gujarat says education minister kuber dindor Rya
Author
First Published Dec 2, 2023, 7:22 PM IST

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு தற்போது இளம் வயதினைரையும் அதிகமாக பாதித்து வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்பதே வேதனையான விஷயம். பள்ளிகளில் விளையாடும் போது அல்லது படிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. 

இந்த நிலையில் குஜராத்தில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 1,052 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர்  என்றும், இறந்தவர்களில் 80 சதவீதம் பேர் 11-25 வயதுக்குட்பட்டவர்கள் என்று அம்மாநில கல்வி அமைச்சர் குபேர் திண்டோர் தெரிவித்தார். அதிகரித்து வரும் மாரடைப்புகளைக் கருத்தில் கொண்டு, ஏறக்குறைய இரண்டு லட்சம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு மருத்துவ அவசரகாலங்களில் முக்கியமான உயிர்காக்கும் சிகிச்சையான சிபிஆர்(CPR) பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

காந்தி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ குஜராத்தில் கடந்த 6 மாதங்களில் மாரடைப்பால் 1,052 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஏறக்குறைய 80 சதவீதம் பேர் 11 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். இந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உடல் பருமன் கூட இல்லை. 108 ஆம்புலன்ஸ் சேவை நாளொன்றுக்கு 173 இதய அவசர அழைப்புகளைப் பெறுகிறது," என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ மாரடைப்புக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் என்பதால் இளைஞர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். கடந்த ஆறு அல்லது ஏழு மாதங்களில் கிரிக்கெட் விளையாடும் போதோ அல்லது கர்பாவில் (நவராத்திரி விழாக்களில் பிரபலமான ஒரு பாரம்பரிய நடனம்) பங்கேற்றபோதோ (மாரடைப்பு காரணமாக) மக்கள் எப்படி இறந்தார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம். எனவே இந்த CPR பயிற்சி முகாமில் பங்கேற்குமாறு ஆசிரியர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அதனால் அவர்கள் உயிரைக் காப்பாற்ற முடியும்" என்று அமைச்சர் கூறினார்.

இந்த மோசமான வாழ்க்கைப் பழக்கங்கள் மாரடைப்பை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் எச்சரிக்கை..

மாநிலக் கல்வித் துறையின் இந்த முயற்சியின் கீழ், 37 மருத்துவக் கல்லூரிகளில் டிசம்பர் 3 முதல் 17-ம் தேதி வரை 2 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் CPR பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். பயிற்சி முகாம்கள் மற்றும் சான்றிதழ்கள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் காவல்துறையினருக்கு இது போன்ற பயிற்சிகள் முன்னதாகவே வழங்கப்பட்டன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios