Grandma's Remedies: 10 நிமிடத்தில் நிவாரணம் தரும் பாட்டி வைத்தியம்: தெரிந்து கொள்ளுங்கள்!

அந்த காலத்தில் நம் தாத்தா, பாட்டி எல்லாரும் வீட்டில் உள்ள நம் அன்றாடம் பயன்படுத்தும் சமையலறை பொருட்களையே மருந்தாகப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய மருந்துப் பொருட்கள் என்னென்ன என்பதத இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

10 Minute Grandmas Remedies Find Out

தற்போது நிலவும் இன்றைய சூழலில் சாதாரண காய்ச்சல், சளி மற்றும்  தலைவலி வந்தால் கூட உடனே மருத்துவமனைக்கு செல்வது வழக்கமாகி விட்டது. நாம் இதை குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில், பல வைரஸ் தொற்றுக்கள் அதிகளவில் பரவி வருகிறது. இருப்பினும், மருத்துவரை கலந்தாலோசித்து தான் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் இன்றைய தலைமுறையினர் மாத்திரையை தான் அதிகம் நாடிச் செல்கின்றனர். ஆனால் அந்த காலத்தில் நம் தாத்தா, பாட்டி எல்லாரும் வீட்டில் உள்ள நம் அன்றாடம் பயன்படுத்தும் சமையலறை பொருட்களையே மருந்தாகப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய மருந்துப் பொருட்கள் என்னென்ன என்பதத இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

பாட்டி வைத்தியம்

தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்தால், ஆடாதோடை இலையை அரைத்து அதன் சாறு எடுத்து, அதில் சிறிதளவு தேனைக் கலந்து தினந்தோறும் நான்கு வேளை என, ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் இருமல் சரியாகும். காலையில் வெறும் வயிற்றில் இதனை சாப்பிட்டால் சளியும் வெளியேறி விடும்.

வாய்வுத் தொல்லை உண்டானால், பாலில் பூண்டு போட்டு காய்ச்சி இரவில் தூங்குவதற்கு முன் பருக வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ச்சியாக இதனைப் பருகினால் வாய்வுத் தொல்லை அகலும்.

செரிமானப் பிரச்சனையைத் தீர்க்க, இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, சிறிதளவு இந்துப்பூவை கலந்து தினந்தோறும் நான்கு வேளை பருகலாம்.

உடல் எடையை குறைக்க எளிய வழிசெய்யும் "கம்பு சாம்பார் சாதம்"!

வயிற்று வலி ஏற்பட்டால் கைப்பிடி கறிவேப்பிலையை, புளித்த மோரிலோ அல்லது சுடுநீரிலோ அரைத்து பருகினால் நின்று விடும்.

சிறிதளவு கடுகு எண்ணெயை சூடுபடுத்தி, தொப்புளைச் சுற்றி தேய்த்தாலும் வயிற்று வலி நீங்கி விடும்.

புளித்த ஏப்பம் சரியாக, இஞ்சி சாற்றில் மிளகு மற்றும் சீரகம் கலந்து மென்று சாப்பிட வேண்டும். இஞ்சி சாற்றில் சிறிதளவு உப்பு கலந்து ருசித்தால் வயிற்றுவலி மற்றும் வாந்தி ஆகிய இரண்டும் கட்டுப்படும்.

மூன்று பங்கு கறிவேப்பிலை மற்றும் ஒரு பங்கு மிளகை எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதனை நெல்லிக்காய் அளவு உருட்டி, புளித்த மோரில் கலக்கி குடித்தால் வாய்ப்புண்கள் சரியாகி விடும்.

உடல் சோர்ந்து விட்டாலே மாத்திரை எடுத்துக் கொள்ளும் இளைய தலைமுறையினர், பாட்டி வைத்திய முறைகளைப் பின்பற்றினால், பக்க விளைவுகள் ஏதுமின்றி நலம் பெறலாம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios