அமெரிக்காவில் தாய், மகள் இருவரும் ஒரே இளைஞரின் மீது காதல்வயப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பது சற்று சவாலான விஷயம்தான். இப்போதெல்லாம் வித்தியாசமான உறவுச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆண், பெண் உறவு மட்டுமின்றி பெண்- பெண், ஆண்- ஆண் ஆகியோரின் காதலும் சபைக்கு வரத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னும் இப்படி காதல்கள் இருந்தாலும், அதை யாரும் வெளிப்படுத்தியதில்லை. இப்போது மக்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அது வரவேற்க வேண்டிய விஷயம்.
ஆனால் சில உறவுகள் ஒட்டுமொத்தமாகவே வேறுமாதிரி உள்ளன. தாய், மகள் இருவர் மீதும் காதல் வயப்பட்ட இளைஞரின் கதையும் அப்படிதான். அந்த இளைஞரின் கதையை பொறுத்தவரை, உண்மையில் நமக்குதான் அது உறவுச் சிக்கல். அவர்களுக்கு இயல்பான வாழ்க்கை. அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் நிக் யார்டி. 29 வயதான இவர், சில மாதங்களுக்கு முன்பு தன் காதலி ஜேட், அவரது தாயார் டானி ஆகிய இருவரும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்த காலகட்டத்தில் தாயும் மகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பது சாதாரணம் தான். ஆனால் இருவரின் கர்ப்பத்திற்கும் நிக் யார்டி என்ற ஒரே ஆள்தான் காரணம் என்பது தான் கவன ஈர்ப்புக்கு காரணம்.
டானி ஸ்விங்ஸுக்கு சுமார் 44 வயது. விவாகரத்தானவர். இவர் நிக் யார்டியுடன் உறவில் இருந்துள்ளார். இருவரும் ஒரே வீட்டில் வசித்துள்ளனர். அங்கு டானியின் மகள் ஜேட் வரவே, அவருக்கும் நிக் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்தாகவும் இணையத்தில் பதிவிட நெட்டிசன்கள் கொதித்து எழுந்துவிட்டனர்.
இதற்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், டானி கூலாக, 'என் மகளை இப்போதுதான் நான் நன்றாக புரிந்துகொள்கிறேன்' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இப்படி ஒரு உறவுமுறையை கற்பனை கூட செய்யமுடியாது என பலரும் சொல்லி வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராயும்போது, சில உண்மைகள் தெரிய வந்தன. சில செய்தி ஊடகங்கள் நிக் யார்டியிடம் இது குறித்து கேட்டபோது, தாய் மற்றும் மகளுடன் தொடர்பில் இருப்பது உண்மை என்றும், ஆனால் அவர்கள் இப்போது கர்ப்பமாக இல்லை அவ்வளவுதான் எனவும் அவர் கூறியுள்ளார். நிக் யார்டியின் இந்த அறிவிப்பு வெறும் கவன ஈர்ப்பு என சமூக வலைதளங்களில் முன்பே கருத்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
