காரணமே இல்லாமல் கணவன் பிரிந்துவிட்டால்- மனைவி சட்டப்படி என்ன செய்யலாம்?

காரணமே இல்லாமல் கணவன் மனைவியை விட்டு பிரிந்தால், மனைவிக்கு என்னென்ன சட்ட வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
 

wife should know her legal proceedings if her husband leaves without any reason

கணவன்-மனைவி இணைந்து வாழ்வது என்பது பாரம்பரியமாக மட்டுமல்ல, சட்டப்பூர்வமாகவும் நடைமுறையில் இருப்பதும் தான். எந்த காரணமும் இல்லாமல் இருவரும் ஒருவருக்கொருவர் விலகி இருக்க முடியாது. கணவன் எந்த காரணமும் இல்லாமல் மனைவியை விட்டு பிரிந்தால், மனைவி சட்டப்படி அதை எதிர்கொள்ளலாம். அந்தவகையில் இந்து மத திருமணச் சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த 15 ஆண்டுகளாக 51 வயதான காயத்ரி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். திருமாண நிலையில், ஒற்றையாக்கப்பட்டு பீகாரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். கணவரை காயத்ரி வீட்டை விட்டு விரட்டிவிட்டார். இனி அவருடன் வாழ விரும்பவில்லை என்று கூறி தாய் வீட்டுக்கு வந்த காயத்ரி, அங்கேயே இருந்துவிட்டார். பெற்றோர்கள் முதலில் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் காயத்ரியின் கணவர் இறங்கிவரவில்லை. 

இதனால் கடந்த 15 வருடங்களாக தாய் வீட்டிலேயே இருக்கிறார். திருமண வாழ்க்கை குறித்து தனக்கு சட்டப்படி இருக்கும் உரிமைகள் குறித்து காயத்ரிக்கு எதுவும் தெரியவில்லை. இந்தக் கதை காயத்ரியின் மட்டுமல்ல, கோடிக்கணக்கான பெண்களின் கதையாகும். எந்தக் காரணமும் இன்றி கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் விட்டுச் செல்ல முடியாது என்று சட்டம் சொல்கிறது. இதுதொடர்பாக இந்து திருமணச் சட்டம் சொல்ல வருவது குறித்து விரிவாக பார்க்கலாம்

இந்திய சட்டத்தில் பெண்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் இதுதொடர்பான சட்ட நுணுக்கங்களை அவர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இந்து திருமணச் சட்டம் 1955, பிரிவு 9ன் கீழ், வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்து, தன்னை தன் கணவன் வீட்டிற்குத் திருப்பி அனுப்பும்படி மேல்முறையீடு செய்ய அதிகாரம் அளிக்கிறது. பெண் வீட்டிற்குச் செல்ல விரும்பினால், நீதிமன்றம் கணவனுக்கு மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கட்டளையிடுகிறது. மற்றும் குடும்ப வாழ்க்கையை சரிசெய்யவும் ஆணையிடுகிறது.

பாதிக்கப்பட்ட பெண், தான் இருக்கும் இடத்தில் இருந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமை உண்டு. ஒருவேளை தன் பெற்றோர் வீட்டில் பெண் இருந்தால், அங்கிருந்தபடியே அங்குள்ள நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். ஒருவேளை பெண் மதுரையில் வசிக்கிறார், கணவர் மும்பையில் இருக்கிறார் என்றால், அந்த பெண் தான் இருக்கும் இடத்திலுள்ள குடும்ப நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஹோம்சிக் கொண்ட நபரா நீங்கள்..? அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள்..!!

இது தவிர, குடும்ப வன்முறைச் சட்டம் 12ன் கீழ் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட பெண் மறு நுழைவு விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். அதுமட்டுமின்றி, அந்த வீட்டின் சொத்தையும் அப்பெண் கோரலாம். இந்த பிரிவின் கீழ், ஒரு பெண் தனது கணவரிடம் இருந்தும் பணம் பெறவும் முடியும். கணவன் அந்த பெண்ணை எந்த காரணமும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, மனைவி தனியாக வசிக்கும் பட்சத்தில், 1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு-125-ன் கீழ், நீதிமன்றத்தில் பராமரிப்புக்கு பணம் கோரி மனைவி முறையிடலாம். 

ஆண்களை விடவும் பெண்கள் அதிகமானோர் குண்டாக இருப்பதற்கு காரணம் இதுதான்..!!

கணவன் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு கண்டுகொள்ளாமல் இருந்தால், கணவனை சரியான பாதையில் கொண்டு வர மனைவிக்கு மற்றொரு ஆயுதம் உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்கலாம். குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (CrPC) பிரிவு 154-ன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட கணவனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios