கணவன் மனைவிக்கு இடையே சரியான வயது வித்தியாசம் என்னவாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

What is Best Age Difference Between Wife and Husband : உண்மையில், காதலை பொறுத்தவரை காதலுக்கு எல்லைகள் இல்லை.. கண்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் என்னவோ காதலிப்பவர்கள் சாதி, மதம், பணம், வயது என எதுவும் பார்ப்பதில்லை. ஆனால், திருமணம் என்பது இந்திய சமூகத்தில் ஒரு புனிதமான பந்தமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் இந்திய மரபின்படி, திருமணம் என்றாலே பல விதிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கணவன் மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம். தற்போது இது ஒரு பொதுவான விவாத பொருளாக உள்ளன. இன்று வரை பல சமூகங்களில் மனைவியை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும் என்று காலம்காலமாக நம்பப்படுகிறது. ஆனால் இது உண்மையில் அவசியமா? அல்லது வெறும் மனநிலையா? என்று இங்கு பார்க்கலாம்.

சமூகம் சொல்வது என்ன?

இந்திய சமூகத்தின் படி, கணவன் மனைவிக்கு இடையே மூன்று முதல் ஐந்து வரை இடைவெளி இருப்பது ஏற்றதாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மனைவியை விட கணவர்தான் மூத்தவராக இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை பாரம்பரியமாக மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இருப்பினும் நடிகை பிரியங்கா சோப்ரா வயதில் குறைந்த அமெரிக்கா பாடகரை தான் திருமணம் செய்து கொண்டார், இந்திய மூத்த கிரிக்கெட் வீரர் சச்சின் அவரது மனைவியை விட 4 வயது இளையவர் இது போன்ற பல பிரபலங்கள் கணவரை விட மனைவி மூத்தவர்களாக இருக்கிறார்கள். இது தம்பதிகள் வயது வித்தியாசம் பார்க்காமல் இந்திய பாரம்பரிய விதிமுறைகளை மீறி, வெற்றிகரமான உறவுகளை தொடர்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் அதிகரித்து வருவதால் பலர் வயது வித்தியாசம் பார்க்காமல் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள். இருப்பினும் பாரம்பரிய கருத்துக்களை பின்பற்றும் ஒரு பகுதியினர் இன்னமும் சமூகத்தில் உள்ளனர்.

அறிவியல் சொல்வது என்ன?

அறிவியலின்படி, திருமணம் செய்வதற்கு உடல் மற்றும் மனமுதிர்ச்சி ரொம்பவே அவசியம். ஏனெனில் பெண்களுக்கு பொதுவாக ஆண்களை விட ஹார்மோன் மாற்றங்கள் சீக்கிரமாகவே நிகழ்கிறது. அதாவது 7 முதல் 13 வயது வரையில் இந்த மாற்றம் ஏற்பட தொடங்கும். ஆண்களுக்கு 9 முதல் 15 வயது வரைக்குள் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றது. இதன் காரணமாக தான் ஆண்களை விட பெண்கள் உடல் மற்றும் மனமுதிர்ச்சியை வளர்த்துக் கொள்கிறார்கள்.

திருமணத்திற்கு ஏற்ற வயது என்ன?

இந்திய சட்டத்தின்படி, திருமண வயது பெண்களுக்கு 18 ஆண்களுக்கு 21 ஆகும். எனவே கணவனுக்கு மனைவிக்கு இடையே மூன்று முதல் ஐந்து வயது வித்தியாசம் இருப்பது பொருத்தமானதாக கருதப்படுகிறது. ஆனால் திருமணம் செய்து கொள்வதற்கு உடல் ரீதியாக முதிர்ச்சி அடைந்தாலும், மனரீதியாக தயார் நிலையில் இருப்பது மிகவும் அவசியம்.

குறிப்பு:

வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு வயது வித்தியாசம் பொருட்டல்ல. மேலும் மூன்று வயது வித்தியாசமாக இருந்தாலும் சரி அல்லது 10 வயது வித்தியாசமாக இருந்தாலும் சரி. இருவருக்குமிடையேயான அன்பு, மரியாதை, புரிதல், ஆதரவு ஆகியவை திருமணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல உதவும்.