Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் காதலர் அடிக்கடி உங்கள் கனவுகளில் வருகிறாரா..? காரணம் இதுதான்..!!

 நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடைய முன்னாள் காதலரைக் கூட நீங்கள் கனவில் சந்திக்க நேரிடும். அதுசார்ந்த உணர்வை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.

Reasons why you could be dreaming about your ex often
Author
First Published Jan 31, 2023, 1:28 PM IST

நாம் நம்முடைய வாழ்க்கையில் கடந்து போகும் முகங்களை அடிக்கடி கனவில் காண்பது விசித்திரம் இல்லை. ஆனால் இதுவரை பார்க்காத நபர்கள் அடிக்கடி கனவுகளில் வருவது பலருக்கும் நடந்திருக்கும். இது சற்று பீதியை கிளப்பினாலும், கனவுகளுக்கு எல்லை கிடையாது. கனவுகளின் தன்மையை புரிந்துகொள்ள அறிவியலும், உங்களது ஆழ்மனது எண்ணங்களும் ஒத்துழைக்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடைய முன்னாள் காதலரைக் கூட நீங்கள் கனவில் சந்திக்க நேரிடும். அதுசார்ந்த உணர்வை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். இதை தவறாக புரிந்துகொண்டு மீண்டும் பழையக் காதலருடன் பேச நினைப்பது, பழக முற்படுவது அல்லது அவரை பார்க்கவேண்டும் என்று தவிப்பது போன்றவற்றை அறவே தவிர்த்திடுங்கள். உங்களுடைய பிரேக்-அப் சூழலை வைத்து, முன்னாள் காதலரை சந்திப்பது குறித்து கனவு கண்ட பின் முடிவு செய்யுங்கள்.

நிறைவடையாத உணர்வுகள்

பிரிவு முறையாக நடக்காமல் போனாலோ அல்லது மிகவும் துன்பம் நேரும் வகையில் பிரிவு ஏற்பட்டாலோ, உங்களுடைய எக்ஸ் அடிக்கடி கனவில் வரக்கூடும். அதற்கு காரணம் அவர் மீது இன்னும் நீங்கள் உணர்வுகளை கொண்டிருப்பதை காட்டுக்கிறது. அதனால் திடீரென்று உங்கள் சொப்பனத்தில் முன்னாள் காதலர் தோன்றினால், அச்சமடைய வேண்டாம். அந்த உணர்வுகளுக்கு இடங்கொடுக்காமல், அடுத்தடுத்த வேலைகளை செய்ய  துவங்கினால், கனவில் அவர் வரமாட்டார்.

எதிர்கொள்வது முக்கியம்

திடீரென்று உங்களுடைய கனவில் முன்னாள் காதலர் தோன்றிவிட்டார் என்றால், அவரை நினைத்து கவலை அடைவது அல்லது முடிந்துபோன காதலை எண்ணி வருந்துவது போன்ற விஷயங்களை செய்யாதீர்கள். உறவு தொடர்பான உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளை செயல்படுத்த மூளைக்கு கனவுகள் ஒரு வழியாக உள்ளன. இது ஒரு இயற்கையான செயல்தான். அந்தக் கனவுகளை விட்டு ஓடிவிடாமல், உங்களுடைய ஆற்றலை எதிர்கொண்டு அதைச் செயல்படுத்துங்கள்.

மன அழுத்தம் அல்லது பதட்டம்

சில நேரங்களில் நமது மனநிலையை பொறுத்துக் கூட கனவுகள் வரக்கூடும். ஒருவருடைய வாழ்க்கையில் நிலவும் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றால் கூட கனவுகள் தூண்டப்படலாம். உங்களுடைய முன்னாள் காதல் சார்ந்த உணர்வுகள், உங்களது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துமானால், நிச்சயம் காதலும் காதலரும் கனவில் வரக்கூடும். அது சகஜமானது தான் என்று நினைத்து, உங்களை நீங்களே தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது கனவு ஏற்படும் போது, உங்களுடைய மனம் பதட்டம் அடையாமல் இருக்கும்.

கால்கள் அடிக்கடி மரத்துப் போகாமல் இருக்க இப்படி செய்து பாருங்கள்..!!

பிரேக்-அப் குறைபாடு

அந்த நபர் உண்மையிலேயே உறவில் இருந்து, சரியான முறையில் வெளியேறவில்லை எனில், அவருடைய நினைவுகள் உங்களை சஞ்சலப்படுத்திக் கொண்டே இருக்கும். அது கனவுகளில் கூட எதிரொலிக்கும். ஆனால் அதை நீங்கள் கவலையான போக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, அந்த நபர் மற்றும் அவர் சார்ந்த உணர்வுகள் கனவுகளின் வழியே வெளியேறக்கூடியதாக இருக்கலாம். 

நினைவுகளின் பங்கீடு

முன்னாள் குறிப்பிட்ட நினைவுகள், இடங்கள் அல்லது செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அதனால் தொடர்ந்து கனவுகள் காண்பது ஏற்படலாம்.

கனவுகள் குறியீடாக இருக்கும். ஆனால் அதேசமயத்தில் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளுடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்காது. உங்களால் உங்களுடைய காதலரின் நினைவில் இருந்து மீண்டு வர முடியவில்லை என்றால், முறையான நிபுணர்களை அணுகி ஆலோசனை பெறுவது முக்கியமாகும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios