Asianet News TamilAsianet News Tamil

இந்த 5 குணங்கள் பொருந்திய பெண்களை ஆண்கள் சீண்டுவதே கிடையாது..!!

ஆண்கள் மீது பெண்களுக்கு இருக்கும் விருப்பு, வெறுப்பு ஆண்களுக்கும் பொருந்தும். பெண்கள் சில ஆண்களை தவிர்ப்பது போல, ஆண்களுக்கு சில குணநலன்களை முன்னிறுத்தி ஒரு சில பெண்களை தவிரித்துவிடுகினனர். குறிப்பிட்ட பெண்களின் சிந்தனை, செயல்பாடு, நோக்கம் போன்றவை அவர்களை ஆண்கள் விலக்கி வைக்க காரணமாகிவிடுகின்றன. தங்களுக்கு பிரச்னை ஏற்படுத்தக்கூடிய குணாதிசியங்களை கொண்ட பெண்களை, ஆண்கள் எப்போதும் தவிரிக்கவே முயற்சி செய்கின்றனர். 
 

men hates women with this 5 qualities
Author
First Published Sep 9, 2022, 6:42 PM IST

நிந்தனை

பெரும்பாலான பெண்கள் தங்கள் பின்னால் வரும் ஆணையே விரும்புகின்றனர். அப்படி வரும் ஆண்களிடம் மறைமுகமாக அவரை பிடித்துள்ளது என்று தெரிவிக்கும் பெண்களை, ஆண்கள் தொடர்ந்து செல்கின்றனர். அது நாளிடைவில் காதலாக மாறுவதற்கும் வித்திடுகிறது. என்னதான் பின்னால் சென்றாலும், குறிப்பிட்ட ஆணை பெண் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னையில்லை. அது அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் நேரத்துக்கு ஏற்றார் போல நடந்துகொண்டுவிட்டு, மனதுடன் விளையாடி, பிறகு விலகிச் செல்லும் பெண்களை ஆண்கள் விரும்புவது கிடையாது.

மாற்றத்தை ஏற்கமாட்டார்கள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாறி தான். ஒருத்தருக்கு மற்றவர் வேறுபட்டவர் என்பதே நிதர்சனம். ஆணுக்கு பெண் வேறு, பெண்ணுக்கு ஆண் வேறு. இந்த அடிப்படைத் தத்துவத்தை புரிந்துகொள்ளாமல் ஆணின் அனைத்து குணங்களை மாற்ற முயற்சிக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிப்பது கிடையாது. தனக்கும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பிரச்னையாக இருக்கும் குணநலன்களை பெண் சொல்லி, ஆண் மாற்றிக் கொள்வது சரியான நடைமுறை தான். ஆனால் தோழியின் கணவனை போல தன் கணவன் கிடையாது, உடன்பிறந்த அண்ணனை போன்று காதலன் கிடையாது என்று பேசும் பெண்களையும், தவறான கற்பதிங்களை கொண்டு உறவுக்குள் புகுத்த விரும்பும் பெண்ணைகளையும் ஆண்கள் வெறுக்கிறார்கள்.

ஆதிக்கமுறை

எதற்கெடுத்தாலும் ஈகோ பார்ப்பது, தன்னிநிலையை மறந்து அகம்பாவம் கொள்ளும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. இதே குணம் ஆண்களுக்கு இருந்தாலும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையிலிருந்து அப்படிப்பட்ட நபரை வெளியேற்றிவிடுவார்கள். ஆணாவது தவறு என்று தெரிந்து மாற்றிக்கொள்வான். ஆனால் இப்படிப்பட்ட குணநலன்கள் பெண்களிடம் இருந்தால், மாற்றுவது சற்று கடினம் தான். 

பொறாமை

தனக்கான வாழ்க்கையை வாழாமல், பிறருடன் ஒப்பீடு செய்துகொண்டே செல்லும் நபர்களுக்கு இயல்பாகவே பொறாமை சற்று கூடுதலாக இருக்கும். இப்படியொரு குணம் படைத்த பெண்ணுடன் வாழும் ஆணுக்கு அனுதாபம் தான் கூற வேண்டும். துணையின் போன் லாக்கை அறிந்துகொள்ள முற்படுவது, சமூகவலைதள கணக்கின் பாஸ்வேர்டுகளை கேட்டு நச்சரிப்பது, அடுத்தவரின் போனை உளவு பார்ப்பது போன்ற காரியங்களை செய்யக்கூடிய பெண்களை ஆண்கள் விலக்கியே வைத்திருப்பார்கள்.

Facial Mask : பல்துலக்கும் பற்பசை சருமத்தை பொலிவுறச் செய்யுமா- அது எப்படி..?
 

ஓரவஞ்சனை

பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும் பெண்கள் வேறுபடுத்தி தான் பார்ப்பார்கள். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும். ஆனால் தனது குடும்பத்தில் நடக்கும் ஒரு விஷயத்தை, எந்த ஆணும் தனது பெற்றோரிடம் சொல்லி புலம்புவது கிடையாது. நண்பர்கள், உடன் பிறந்தவர்களிடம் கூட பகிர்ந்துகொள்ளும் ஆண்கள் வெகு குறைவே. ஆனால் பெண்கள் அப்படியல்ல, புகுந்த வீட்டில் ஒரு தவறு நடந்துவிட்டால் போதும் உடனடியாக பெற்றோர் வீட்டுக்கு சொல்லிவிடுவது. இதை பெண்கள் தரப்பினர் குடும்பத்தின் மீதுள்ள அக்கறை என்று நியாயப்படுத்தலாம். ஆனால் உண்மை அப்படி இருப்பது கிடையாது. பிறந்தவீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு வரும் பெண்கள் ஒரு பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர். அதற்கான தீர்வை காணாமல், மற்றவர்களின் தவறை கொண்டு ஆறுதல் அடைய முயற்சிக்கின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios