Asianet News TamilAsianet News Tamil

கணவனை முந்தானைக்குள் முடிந்துவைக்க இந்த மந்திரச்சொற்கள் போதும்..!!

ஒவ்வொரு உறவுக்கும் வலுவாக அமைவது, உறவுக்குள் உருவாகும் நெருக்கம் தான். அது இல்லாமல் போகும் தான், உறவு தவறுகிறது. மனைவிகள் பலரும் தங்களது கணவர், தங்களுடைய பேச்சைக் கேட்பது கிடையாது என்பது பெரும் குற்றமாக முன்வைக்கின்றனர். இது தம்பதிகளுக்கிடையே புரிதல் உருவாகவில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்படிப்பட்ட பிரச்னை உங்களுடைய இல்லற வாழ்வில் நிலவுவதாக தெரிந்தால், உடனடியாக இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். சில எளிய அணுகுமுறையுடன் பயனுள்ள வழிமுறைகள் உங்களுக்கு தெரியவரும்.
 

Magic Words To Get Everything You Want From partner
Author
First Published Sep 14, 2022, 10:33 PM IST

அடக்கம் அமரருள் உய்க்கும்

வள்ளுவன் கூறிய இந்த மொழிகள் தனிமனித வாழ்க்கைக்கு மட்டுமின்றி, தாம்பத்தியத்துக்கும் பொருந்தும். உங்களுக்கும் உங்களுடைய துணைக்கும் சண்டை ஏற்படும் போது, அமைதியை கடைப்பிடிக்கவும். ஏதாவது முக்கியமான விவாதம் எழுந்தால் அமைதியுடன் பதிலளிக்கவும். எந்தநிலையிலும் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. ஒருவேளை எடுத்த எடுப்பில் உங்களால் அமைதியாக இருக்க முடியவில்லை என்றால், படிப்படியாக முயற்சித்து பார்க்கவும். அதேபோன்று சண்டை முடிந்து சமாதானம் அடைந்துவிட்டால் ‘ப்ளீஸ்’ அல்லது ‘நன்றி’ என்கிற வார்த்தைகளை ஒவ்வொருமுறையும் பயன்படுத்துங்கள். உங்களை நீங்கள் தன்னடக்கத்துடனும் அமைதியான நபராக வெளிப்படுத்தும் போது, உங்கள் வழிக்கு துணை வந்துதான் ஆக வேண்டும். உங்களை அவ்வளவு சிக்கரம் சண்டையிட்டு கோபப்படுத்த முடியாது என்று தெரிந்துகொண்ட பின், தன் மீதான தவறை உங்களுடைய துணை மாற்ற முயற்சிப்பார்.

பரஸ்பர வாழ்த்துக் கூறல்

நீண்டகாலமாக இணைந்து வாழும் தம்பதி, அவரவரின் நல்லது, கெட்டதுகளை நன்கு அறிந்துகொண்டிருப்பர். இதனால் ஒருவர் ஒருவருக்கு செய்யும் நன்மைகளையும், அதனால் கிடைக்கும் பலனையும் கண்டும் காணாமல் இருந்திருப்போம். இதையெல்லாம் சராசரி வாழ்க்கையில் கவனிக்க தேவையில்லை என்பன போன்று நிலைபாடு பலரிடையே உண்டு. ஆனால் வாழ்க்கைத் துணையாகவே இருந்தாலும், ஒவ்வொரு செயலுக்கும் தேவையை பூர்த்தி செய்யும்போது நன்றி அல்லது ப்ளீஸ் போன்ற வார்த்தைகளை அவ்வப்போது சொல்லுங்கள். உங்கள் துணை நன்றாக ஆடை உடுத்தியிருந்தால் ‘அழகாக உள்ளது’ என்று கூறுங்கள், மனைவி நன்றாக சமைத்திருந்தால் மனமாற பாராட்டுங்கள், கணவன் வீட்டு வேலை செய்தால் நன்றி கூறுங்கள். இப்படிப்பட்ட சொற்கள் உறவுகளுக்குடையே உருவானால், அந்த உறவு உன்னதமாகும். 

முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்

உங்களுடைய துணை, தங்களுடைய வாழ்வில் இடம்பெற்றுள்ளதால் ஏற்பட்டுள்ள முக்கியத்துவம் அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருங்கள். உங்களுடைய கணவனையோ/மனைவியையோ துணையாக அடைந்திருப்பதில் நன்றிக்கடன் பட்டுள்ளதாக கூறுங்கள். இதன்மூலம் தவறு செய்யக்கூடிய நபராக இருந்தாலும், அதை திருத்திக்கொள்ள முயலுவார்கள். உறவுகளுக்கிடையில் பரஸ்பரமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் போது, அந்த உறவு வலுபெறுகிறது. தனது துணையை தலைமீது தூக்கிவைத்து கொண்டாடும் கணவனை மனைவிமார்கள் விட்டுக்கொடுப்பதே கிடையாது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதேபோன்று உறவில் பொறுமையை கையாளும் மனைவியிடம் கணவன்மார்கள் நேர்மையாக இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடமையும் காதலும்

இல்லற வாழ்க்கையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நிறைய கடமைகள் உள்ளன. அந்த கடமைக்கு இடையில் ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அன்பை மறந்துவிடக் கூடாது. உறவை துவங்குபவராக இருந்தால், அவ்வப்ப்போது உங்களுடைய அன்பருக்கு நீங்கள் ’ஐ லவ் யூ’ என்று கூறி வாருங்கள். அதேபோன்று பரஸ்பரமாகவும் அன்பு பரிமாறப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் கூறும்போது, அதை உளமாற உணர்ந்து கூறுவதாக இருக்க வேண்டும். ஐ லவ்  யூ என்கிற வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்கள் உண்டு. உங்கள் துணை புரிந்துகொள்ளும் பொருளில் அதை தெரிவிக்க மறந்துவிடாதீர்கள். ஒருவேளை நீங்கள் வாழ்க்கையை துவங்கி நீண்ட நாளாகிவிட்டது என்றால், உடனடியாக அந்த பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இதன்மூலம் தம்பதிகளின் காதலும் மறவாது, கடமையும் தவறாது.

தங்கத் தட்டில் வைத்து தாங்குங்கள்

உங்களுடைய உறவை மேலும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாலும், உங்களுடைய துணையுடம் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ளுங்கள். உங்களது துணையை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை மணிக்கு ஒருமுறை அவருக்கு நினைவுப்படுத்திக் கொண்டெ இருங்கள். இது உங்களுடைய உறவை முழுவதும் காதலுடன் மாற்றும். அதேபோன்ற கைக்கொடுத்து உதவுவது உறுதுணையாக இருப்பது போன்ற செயல்பாடுகளும் உங்களுடைய துணைக்கு உங்கள் மீது நம்பிக்கையை அதிகரிக்கும். மேலே கூறப்பட்டுள்ள இந்த செயல்பாடுகளை எந்த கூச்சமும் பாராமல் உடனடியாக உங்களுடைய உறவில் அமலுக்கு கொண்டுவாருங்கள், நிச்சயம் உங்களுடைய உறவு காலத்துக்கும் காதலுடன் இருக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios