ஆண்களிடம் இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது..!!
விந்தணு திரவத்தை உற்பத்தி செய்வது மற்றும் ஆண் விந்தணுக்களின் சரியான செயல்பாட்டிற்கு உதவும் வேலையை புரோஸ்டேட் சுரப்பி செய்து வருகிறது. இது சிறுநீர்ப்பைக்கு கீழே மற்றும் மலக்குடல் முன் அமைந்துள்ளது
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஆண்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதற்கு புரோஸ்டேட் தொடர்பான பிரச்சனைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. ஆண்களின் இனப்பெருக்க அமைப்பில் புரோஸ்டேட் சுரப்பி முக்கிய பங்காற்றுகிறது. இது சிறுநீர்ப்பைக்கு கீழே மற்றும் மலக்குடல் முன் அமைந்துள்ளது. விந்தணு திரவத்தை உற்பத்தி செய்வது மற்றும் ஆண் விந்தணுக்களின் சரியான செயல்பாட்டிற்கு உதவுவது போன்றவை புரோஸ்டேட் சுரப்பியின் முக்கிய செயல்பாடாகும்.
வயது முதிர்ந்த ஆண்களுக்கு மட்டுமல்ல, இளம் வயதினருக்கு கூட விதைப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக இந்த பாதிப்பு 45 வயதிற்குட்பட்ட ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. விதைப்பை புற்றுநோயின் பாதிப்பு என்பது வயதுக்கு ஏற்ப மாறுகிறது. புரோஸ்டேட் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் எலும்பு வலி, சோர்வு மற்றும் எடை இழப்பு ஆகியவை ஆகும்.
இது தொடர்ந்து அதிகரிக்கும் போது சிறுநீர் அடைப்பு, சிறுநீர் வந்தால் எரிவது போன்ற பாதிப்புகள் வெளிவர துவங்கும். இது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். அப்போது கால்களில் வீக்கம் ஏற்படுவதாகும். புற்றுநோய் நிணநீர் மண்டலங்களுக்கு பரவுவதன் காரணமாக கால்களில் வீக்கம் உருவாகிறது.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், நோயை குணப்படுத்த முடியும். ஆனால் அதுசார்ந்த விழிப்புணர்வு என்பது பலரிடையே குறைவாக இருப்பதால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது ஒரு கொடிய நோயாக மாறுகிறது. அதற்கு முதன்மையான காரணம் நோய் மிகவும் தாமதமாக கண்டறியப்படுவதே ஆகும்.
சரும ஆரோக்கியத்தை காக்கும் ரோஸ் வாட்டர்...அறிந்ததும்... அறியாததும்..!!
விதைப்பை புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்...
- அடிக்கடி சிறுநீர் வந்துகொண்டே இருப்பது
- சிறுநீர் கழித்தான் ஆண்குறியில் எரிச்சல் உண்டாவது
- சிறுநீரில் அல்லது விந்துவில் ரத்தம் வெளியேறுவது
- மலக்குடலில் அழுத்தம் ஏற்படுவது
- இடுப்பு அல்லது மலக்குடல் அமைந்துள்ள இடத்தில் வலி.
- முதுகெலும்பு மற்றும் பிற எலும்புகளில் வலி
- எலும்பு முறிவு மற்றும் சிறுநீரக செயலிழப்பு
ஆகியவை புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.
சில வகையான புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறியற்றதாக இருக்கலாம். பெரும்பாலானபுற்றுநோய் சுரப்பியின் வெளிப்புறத்தில் ஏற்படுகிறது. அதனால் அறிகுறிகள் தென்படுவது கிடையாது. மேற்கூறிய அறிகுறிகள் உள்ளவர்களை நோய்த்தொற்று என்று கருதக்கூடாது. ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும் மற்றும் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.