'முதலில் காதலை சொன்னது மருமகள் தான்' சொந்த மகனின் மனைவியை திருமணம் செய்து வாழும் முதியவர்!

சுமார் 70 வயதான முதியவர் கைலாஷ், தனது 28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. 

father in law married his own daughter in law in uttar pradesh

அண்மை காலங்களில் திருமணம் என்ற உறவே அர்த்தமற்றதாகிவிட்டது. தந்தைக்கும் மகளுக்குமே சில இடங்களில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் 70 வயது முதியவர், தனது 28 வயது மருமகளை திருமணம் செய்துள்ளார். கோயிலில் நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கோட்வாலி பகுதியில் உள்ள சாபியா உம்ராவ் கிராமத்தில் இத்திருமணம் நடந்தது. இங்கு வசிக்கும் கைலாஷ் யாதவ் (70) தான், தனது மருமகள் பூஜாவை மணந்துள்ளார். கைலாஷின் மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இத்தம்பதிக்கு நான்கு பிள்ளைகள். அதில் மூன்றாவது மகனின் மனைவி தான் பூஜா. ஆனால் பூஜாவின் கணவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து பூஜா வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். 

ஆனாலும் பூஜாவிற்கு தன் கணவனை பிடிக்கவில்லை. இதனால் மனம் வெறுத்து போன பூஜா அங்கிருந்து புறப்பட்டு முன்னாள் கணவர் வீட்டிற்கே மீண்டும் வந்துள்ளார். அப்போதுதான் தன் மாமனார் மீது காதல் ஏற்பட்டுள்ளது. யாரையோ திருமணம் செய்வதை விட மாமானாரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து மாமனாரிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த கைலாஷ், அவரை கோயிலில் வைத்து மணந்து கொண்டார். தள்ளாத வயதில் தனக்கும் நல்ல துணையாக வேண்டும் என அவர் நினைத்திருக்கிறார். இவர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

இதையும் படிங்க: 48 வயதிலும் அழகில் கவர்ச்சி காட்டும் கரீனா கபூரின் அக்கா.. தங்கையை மிஞ்சும் அழகுக்கு என்ன செய்யுறாங்க தெரியுமா

இந்த திருமணத்தை சமூக ஊடகத்தில் பலரும் விமர்சித்தாலும், இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும், பூஜா தனது புதிய திருமணத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது திருமண நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் கிராம மக்களுடன் கலந்து கொண்டனர். அதிலும் கணவர் இறந்த பிறகு பூஜா தனிமையில் இருந்ததாக சிலர் கூறுகின்றனர். மற்றவர்கள் வேறு ஒருவரை பூஜா திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த குடும்பம் பிடிக்காததால் முன்னாள் கணவன் வீட்டிற்கு திரும்பினார். அதன் பிறகு தான் அவள் தன் மாமனாரை மணக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தில் வாட்ச்மேனாக வேலை செய்யும் கைலாஷ் யாதவின் திருமணம் குறித்த தகவல், சமூக ஊடகங்கள் மூலம் காவல் நிலையத்திற்கும் சென்றடைந்தது. இது குறித்து பர்ஹல்கஞ்ச் காவல் அலுவலர்,"வைரலாகி வரும் புகைப்படத்தின் மூலமே இந்த திருமணம் பற்றி எங்களுக்கு தெரியும். இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. இது இருவருக்குமிடையே உள்ள பரஸ்பர பிரச்சனை, யாரேனும் புகார் அளித்தால், காவல்துறை விசாரிக்கும்"என்றார். 

இதையும் படிங்க: அடடா! இப்படி செக்ஸ் வைத்தால் போதுமாம்... உடற்பயிற்சியே பண்ண தேவையில்லை...!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios