பாலியல் நோய் பரவலை தடுக்க நூதன அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்..!!
பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாலியல் கல்வி மிகவும் அவசியமானது. அதன் தொடர்ச்சி பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.
இளைய தலைமுறையினரிடையே ஏற்படும் தேவையற்ற பாலியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 18 முதல் 25 வயதுடையவர்களுக்கு இலவச ஆணுறை வழங்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பை வெளியிட்ட அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இது கருத்தடைக்கான ஒரு சிறிய புரட்சி மற்றும் இந்த நடவடிக்கையில் சுகாதாரமான வாழ்கையும் இடம்பெற்றுள்ளது என்று கூறினார். அதன்படி பிரான்ஸ் நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களில் ஜனவரி 1 முதல் 18 முதல் 25 வயதுடையவர்களுக்கு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுவதால் ஏற்படும் சிறிய புரட்சி குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
பால்வினை நோய்கள் (STDs) பரவுவதைக் குறைக்கும் முயற்சியாக பிரான்சில் உள்ள இளைஞர்கள் அடுத்த ஆண்டு முதல் இலவச ஆணுறைகளைப் பெற முடியும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். இது கருத்தடைக்கான சிறிய முயற்சியாக இருந்தாலும், எச்.ஐ.வி பரவுவதைத் தடுக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
ஒருநாளைக்கு எத்தனை முறை மலம் கழிக்கிறீர்கள் என்று கவனித்தது உண்டா..?
பிரெஞ்சு சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில், நாட்டின் தேவையற்ற கர்ப்ப விகிதம் 2020 மற்றும் 2021 இல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிவித்துள்ளது. அதை வரும் 2023-ம் ஆண்டு முதல், கட்டுப்படுத்தும் நோக்கில் 25 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் இலவச பிறப்புக் கட்டுப்பாட்டை பிரெஞ்சு அரசாங்கம் வழங்கத் தொடங்கியது. அந்நாட்டிலுள்ள 18 வயதிற்குட்பட்டவர்களை இலக்காகக் கொண்டு கருத்தடை செய்வதற்கான நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டன. வரும் காலங்களில் இதுதொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசாங்கம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற விவகாரத்தில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் பெங்களூருவில் 10-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.