முத்தம் கொடுப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அறிவியல் பூர்வ உண்மைகள் இதோ..
முத்தம் கொடுப்பதால் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பது முதல் மன அழுத்தத்தை குறைப்பது வரை பல நன்மைகள் கிடைக்கின்றன.
காமம் என்பதை தாண்டி முத்தம் என்பது அன்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால் முத்தம் கொடுப்பதால் நம் உடலுக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம்.. உண்மை தான். முத்தம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிவியல் ஆராய்ச்சி காட்டுகிறது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பது முதல் மன அழுத்தத்தை குறைப்பது வரை முத்தம் கொடுப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
முத்தம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிப்பது ஆகும். உங்கள் துணையுடன் நீங்கள் முத்தமிடும்போது, சுமார் 80 மில்லியன் பாக்டீரியாக்கள் பரிமாறப்படும். பாக்டீரியாவின் இந்த பரிமாற்றம் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவுகிறது. மைக்ரோபயோம் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அடிக்கடி முத்தமிடும் தம்பதிகள் ஒரே மாதிரியான வாய்வழி மைக்ரோபயோட்டாவைப் பகிர்ந்து கொள்வதால், இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் திருமண உறவு மோசமாக உள்ளது என்பதை குறிக்கும் அறிகுறிகள் இதோ; தம்பதிகளே நோட் பண்ணுங்க!!
மன அழுத்தம், பதட்டத்தை குறைக்கும்
முத்தம் கொடுப்பது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தம்பதிகள் முத்தமிடும் போது, உடலில் எண்டோர்பின்கள் என்ற நல்ல ஹார்மோன்கள் உருவாகின்றனர். இது ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கிறது. அதாவது மன அழுத்தத்துடன் தொடர்புடைய கார்டிசோலின் அளவை இந்த ஹார்மோன் குறைக்கிறது. முத்தம் கார்டிசோலின் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது, மேலும் மன அழுத்தத்தை மிகவும் திறம்பட நிர்வகிக்க உதவுகிறது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
முத்தமிடுவது உங்கள் இதயத்திற்கும் நன்மை பயக்கிறது. நீங்கள் முத்தமிடும்போது, உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, இது மேம்பட்ட சுழற்சிக்கு வழிவகுக்கிறது. மேலும் இது ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அதே நேரம் இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜி நடத்திய ஆய்வில், அடிக்கடி முத்தமிடும் தம்பதிகளுக்கு ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு குறைவதால், இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Relationship Advice : உடலுறவில் கிளைமேக்ஸ்.. ஆனா நோ யூஸ்... புலம்பும் பெண்!
கலோரிகளை எரிக்க உதவும்
உங்கள் துணைக்கு நீங்கள் கொடுக்கும் உணர்வுப்பூர்வ முத்தம் கலோரிகளை எரிக்க உதவுகிறது. முத்தத்தின் நிமிடத்திற்கு 2 முதல் 6 கலோரிகளை எரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின்படி, முத்தத்தின் மூலம், அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி அதிகரிக்கும்
முத்தம் செரோடோனின் மற்றும் டோபமைன் ஆகிய ரசாயனங்களை சுரக்க தூண்டுகிகிறது. இது மகிழ்ச்சி உணர்வை அளிக்கும். மேலும் முத்தம் கொடுக்கும் போது எண்டோர்பின்கள் என்ற நல்ல ஹார்மோன் சுரப்பதால் அது இயற்கையான வலி நிவாரணிகளாக செயல்படும். பெயின் ரிசர்ச் அண்ட் மேனேஜ்மென்ட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், முத்தம், ரத்த ஓட்டத்தை அதிகரித்து, எண்டோர்பின்களை வெளியிடுவதன் மூலம் தலைவலி மற்றும் மாதவிடாய் பிடிப்பைக் குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.
தசைகளை வலுப்படுத்தும்
முத்தம் கொடுக்கும் போது நம் உடலில் உள்ள 34 முக தசைகள் பயன்படுத்தப்படுகிறதாம். இது முக தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமும், உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுப்பதன் மூலம் இளமை தோற்றத்திற்கும் உதவுகிறது.. முத்தம் கொடுப்பதால் சருமத்திற்கு அதிக ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும் என்று வயதான தோற்றத்தை தடுக்க முடியும் என்றும் தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உறவை வலுப்படுத்தும்
ஒரு உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும், பிணைப்பை வலுப்படுத்தவும் முத்தம் ஒரு முக்கியமான அம்சமாகும். இது "காதல் ஹார்மோன்" என்று ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கிறது. மேலும் உணர்ச்சிப் பிணைப்பு மற்றும் இணைப்பை வளர்க்கிறது. செக்சுவல் பிஹேவியர் காப்பகங்களில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அடிக்கடி முத்தமிடும் தம்பதிகள் அதிக அளவிலான திருப்தி மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பை கொண்டிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. முத்தத்தின் இந்த அறிவியல் பூர்வ நன்மைகள், பரஸ்பர அன்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுகளை வலுப்படுத்துவதுடன், ஒட்டுமொத்த உறவை பலப்படுத்துகிறது.