Asianet News TamilAsianet News Tamil

யாரிடமும் சொல்லக்கூடாத ‘அந்த’ ரகசியங்கள்..!!

நமக்கு தெரிந்த தகவல்களை நமக்குள் வைத்திருப்பது சற்று கடினமானது தான். அதனால் நாம் சொன்னால் யார் நம்புவார்களோ, அவர்களிடம் நமக்கு தெரிந்ததை கூறுவோம். ஆனால் யாரிடமும் கூறக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. 
 

5 secrets you should never share even if you go to the grave
Author
First Published Jan 7, 2023, 10:13 AM IST

மக்கள் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர், அவை அவர்களின் அனுபவங்களால் வடிவமைக்கப்படுகின்றன. சிலர் தங்கள் ரகசியங்களை நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தேர்வு செய்யலாம், ஆனால் இந்த ரகசியங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது பெரும்பாலும் கடினம். நமக்கு தெரிந்த தகவல்களை நமக்குள் வைத்திருப்பது சற்று கடினமானது தான். அதனால் நாம் சொன்னால் யார் நம்புவார்களோ, அவர்களிடம் நமக்கு தெரிந்ததை கூறுவோம். ஆனால் யாரிடமும் கூறக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அதுகுறித்து தொடர்ந்து பார்க்கலாம்

நிதி தகவல்கள்

நிதி சார்ந்த தகவல்களை நாம் யாரிடமும் சொல்லக்கூடாது. அதில் கண்டிப்பாக ரகசியமாக இருக்க வேண்டும். பல வீடுகள் பெண்கள் தங்களிடம் இருக்கும் சேமிப்பு தகவல்களை கணவரிடம் கூட சொல்லமாட்டார்கள். அதேபோன்று அதிகளவில் செலவு செய்யும் மனைவிகளிடம் கணவர்கள் தங்களுடைய சேமிப்பு விபரங்களை சொல்லமாட்டார்கள். சேமிப்பு, நிதி பரிமாற்றம் உள்ளிட்டவை தனிப்பட்ட விஷயங்களாகும். அதேபோன்று பல இளையதலைமுறையினர் தங்களுடைய உண்மையான சம்பளத்தை வீட்டில் கூறுவது கிடையாது என்பது சமீபத்தில் தெரியவந்த தகவலாகும்.

குடும்பப் பிரச்னை

வீட்டில் நடக்கும் சண்டை, சச்சரவுகள், அடிதடிகளை யாரிடமும் சொல்லக்கூடாது. வீட்டில் இருக்கும் பிரச்னைகளை தனது குடும்ப உறுப்பினர்களிடம் பாதிக்கப்பட்ட நபர் கூறலாம். கணவர் மனைவியிடத்தில் கூறலாம். நாத்தனார் வீட்டில் நடக்கும் கொடுமையை அண்ணியிடத்தில் சொல்லலாம், அண்ணி புகுந்த வீட்டில் நடக்கும் பிரச்னைகளை நாத்தனாரிடம் கூறலாம். ஆனால் நாத்தனார் தனது பிறந்த வீட்டில் நடக்கும் கொடுமைகளை 
கணவர் வீட்டாரிடம் சொல்லக்கூடாது. அதேபோல அண்ணி நாத்தனார் வீட்டு கொடுமைகளை தனது பிறந்தவீட்டில் பகிரக்கூடாது. இதனால் குறிப்பிட்ட உறவு மீது மதிப்பு தான் குறைந்துபோகும்.

வாழ்க்கை லட்சியம்

வாழ்க்கை சார்ந்த ரகசியங்களில் பிறரிடம் நம்முடைய லட்சியத்தை யாரிடத்திலும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. ஒருவேளை நாம் வெளியில் சொல்லி, அந்த லட்சியம் நிறைவேறாமல் போய்விட்டால்  நமக்கு தான் அசிங்கம். அதனால் உங்களுடைய வாழ்க்கை மீதான லட்சியத்தை குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் கூட பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. ஆனால் உங்களுடைய வெற்றிக்கு உறுதுணை செய்பவர்களிடம், மறைமுகமாக லட்சியத்தை அவர்களுக்கு எடுத்துரைக்கலாம். ஒருவேளை அவர்களுக்கு உங்களுடைய வெற்றியின் மீது ஆர்வமிருந்தால், என்றைக்கும் உடனிருப்பார்கள்.

வெல்லத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கா? அட... இது தெரியாம போச்சே..!!

காதல்

உங்களுடைய காதலை உங்களது காதலியை தவிர, வேறு யாரிடமும் சொல்லக்கூடாது. உங்கள் காதலியிடம் காதலியை கூறுவதற்கு நண்பர்களை தூது அனுப்பாதீர்கள். ஒரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கையில் காதல் என்பது மிகவும் முக்கியமான அத்தியாயம் ஆகும். அதுதொடர்பான முழுமையான அனுபவத்தை சம்மந்தப்பட்டவர்கள் தான் அனுபவிக்க வேண்டும். அதற்கு நீங்கள் மற்றவரை துணைக்கு அழைத்தால், உங்களுடைய காதலன் அல்லது காதலிக்கு உங்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிடக் கூடும். உங்களுடைய காதல் உறுதியான பிறகு, உங்களது காதல் உறவை பிறரிடத்தில் வெளிப்படுத்தலாம். அதுவரை எல்லாமே ரகசியமாக இருப்பது முக்கியம்.

அவமானம்

உங்கள் துணையுடனான உங்களுடைய காதல் வாழ்க்கையை யாரிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாது. உங்களை யாராவது அவமதித்தாலோ இல்லை அசிங்கமாக பேசினாலோ, அதை வெளியே சொல்லக்கூடாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வயது என்பதை வெளியே சொல்லக்கூடாது. அதனால் யார் கேட்டாலும் உங்களுடைய வயதை வெளியே சொல்லாதீர்கள். எல்லோருக்கும் பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும். அதனால் அதை வெளியே சொல்லக்கூடாது. உங்களுடைய மருத்துவ நிலையை வெளியே சொல்வதற்கும், பலவீனங்களை பகிர்ந்துகொள்வதற்கும் வேறுபாடு உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios