காதலிக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய 5 குணநலன்கள்..!!

காதலிப்பவர்கள் காதல் மீதான மிகுதியால் சில விஷயங்களை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். காதல் அன்று தோன்றி அன்றே முடியும் விஷயம் கிடையாது. அது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டியது. அந்த வகையில் காதல் வாழ்க்கை நிலைத்து நீடித்திருப்பதற்கான தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

5 important things that men and women need to fall in love

காதலுக்கு காதலை சொன்னவரும், அதை ஏற்றுக்கொண்ட நபர் மட்டும் போதாது. அதை தாண்டி உணர்வு, மரியாதை, நம்பகத்தன்மை, சிந்தனை, கருத்துப் பரிமாற்றம் உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள் தேவைப்படுகிறது. இவை காதலை வெளிப்படுத்திய அன்றே கிடைத்துவிடாது. மெல்ல, மெல்ல தான் அவை உங்களை வந்தடையும். அதற்கு மலையளவு பொறுமையும் சமுத்திரம் அளவு சகிப்புத்தன்மையும் வேண்டும். அந்த வகையில் காதலிக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒன்றுபட்ட சிந்தனை

எல்லோருக்கும் ஒரேவிதமான சிந்தனை மற்றும் கருத்துருவாக்கம் இருந்துவிட முடியாது. மனிதகுலத்தில் அதை நாம் பார்க்கவும் முடியாது. சிந்தனை, செயல்திறன், அதுசார்ந்த செயலாக்கம் உள்ளிட்டவை தனித்திருக்க வேண்டும். அதுதான் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு உதவும். ஆனால் குடும்ப வாழ்க்கை அல்லது காதல் என்று வரும்போது ஒத்த முடிவு சார்ந்த சிந்தனை தான் தேவைப்படும். ஒருவேளை ஒன்றுபட்ட முடிவு எடுப்பதில் பிரச்னை இருந்தால், வாழ்க்கை சுவைக்காது. எனவே எதிர்கால செயலாக்கம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் முடிவுகளை ஒன்றுபட்டு எடுங்கள்.

பாதுகாப்பு

காதல் உறவு இருவருக்கும் பாதுகாப்பு தருவதாக இருப்பது முக்கியம். அதற்கு மாறாக அச்சம், பயம் அல்லது கீழ்படிதல் போன்றவை இருந்தால் காதல் வெற்றி அடைவது கடினம் தான். நீங்கள் சேர்ந்து இருக்கும் போது காதல் முழுமையாக நிறைந்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக பெயருக்காக இருக்கிறேன், வேறுவழியில்லை என்பதால் சேர்ந்திருக்க வேண்டியுள்ளது என்கிற கட்டாயம் இருக்கக்கூடாது. ஒருவரையொருவர் புரிந்துகொள்வது, விட்டுக்கொடுத்து இருப்பது போன்றவை காதல் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

நம்பிக்கை

காதல் ஒருவித உணர்வு சார்ந்தது. அதனால் அதை உணர்வு ரீதியாக தான் அணுக வேண்டும். உங்களுடைய காதலன் அல்லது காதலி மீது முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களுக்கு என்று இருக்கும் தனிப்பட்ட முடிவுகள் மற்றும் காரியங்களில் தலையிடக் கூடாது. குடும்பமாக மற்றும் கணவன் மனைவியும் சேர்ந்து முடிவெடுக்கக் கூடிய விஷயங்கள் தலையிடுவதில் தவறில்லை. காதல் உங்களுடைய உடமையாக இருக்கலாம். அதற்காக காதலர்/காதலி உங்களுடைய உடமையாகிவிட மாட்டார்கள். காதலை பயன்படுத்தி சிலர் உங்களிடம் தவறாக நடக்க முயலுவார்கள். அப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து நீங்கள் சீக்கரமாக விலகிவிடுவது உங்களுக்கு மிகவும் நல்லது.

நிதி நெருக்கடியை விரட்டும்; தாம்பத்தியத்தை சிறக்கவைக்கும் குங்குமப்பூ..!!

காதல்

சிலருக்கு காதல் அதிகளவில் இருக்கும், ஆனால் காதலர்களுக்குள் பாலியல் ரீதியான ஈர்ப்பு இருக்காது. ஒருவேளை தங்களுக்குள் ஏற்பட்ட இணக்கமான உணர்வை, அவர்கள் காதலாக புரிந்துகொண்டிருக்கலாம். நடப்புக்கும் மீறிய உணர்வை காதலாக புரிந்துகொள்வதால் ஏற்படும் விளைவு தான் இது. அதனால் உங்களுக்குள் ஒருவர் மீது எழும் உணர்வை, அழமாக ஆராய்ந்து பார்ப்பது முக்கியம். எதையும் கட்டாயப்படுத்தி வரவைக்க முயலாதீர்கள். அது பெரிய பிரச்னையில் போய் முடியும். ஒருவேளை காதல் சார்ந்த உணர்வு ஒருவருக்கு இருந்து, மற்றவருக்கு இல்லாமல் இருந்தால், நீங்கள் அமர்ந்து பேசி விளங்கவைக்க முயற்சி செய்யுங்கள்.

மரியாதை

காதலில் மரியாதை மிகவும் அவசியமானது. அப்போது தான் மேலே சொன்ன எல்லாவிதமான படிநிலைகளும் காதலர்களுக்குள் ஏற்படும். சமூக அழுத்ததால் இதுபோன்ற உறவுக்குள் சென்றால், அது நிச்சயம் தீமையை தான் வழங்கும். இருவரும் தங்களுடைய அன்பருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். காதலிக்கிறோம் என்பதால் ஒருவரை மற்றொருவர் கீழாக நடத்தக்கூடாது. அவரை உடல்ரீதியாக, மனரீதியாக, உளவியல் ரீதியாக என எல்லா வகையிலும் மதிக்க வேண்டும். உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பு கொடுத்து காதலை வளர்க்க வேண்டும். அப்போது தான் அந்த உறவு நிலைபெறும் மற்றும் நீடித்திருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios