தலப்பாக்கட்டி முதல் ஹைதராபாத் பிரியாணி வரை.. இந்தியாவில் எந்த பிரியாணி மிகவும் பிரபலமானது?

பிரியாணி என்ற பெயரை கேட்டாலே ஒருவரின் வாயில் உமிழ்நீர் ஊற வைக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். உலக பிரியாணி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) கொண்டாடப்படுகிறது.

World Biriyani Day 2024: Which Indian biryani is the most popular?-rag

அசைவம் சாப்பிடுபவர்கள் எவ்வளவுதான் வயிறு நிரம்பினாலும் பிரியாணி என்றாலே வயிற்றில் கூடுதல் இடம் ஒதுக்கி சாப்பிடுவார்கள். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விரும்பப்படும் உணவு பிரியாணி ஆகும். கிழக்கிலிருந்து மேற்கு, வடக்கிலிருந்து தெற்கு என டஜன் கணக்கான கிச்சடி/தாலி வகைகளை மக்கள் உண்ணும் நாட்டில், வெஜ் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி என பல தனித்தன்மையான ரெசிபிகளுடன் சமைக்கப்படுகிறது. எந்த பிரியாணி சிறந்தது என்று அதன் சுவை பிரியர்களிடையே முடிவற்ற விவாதம் தான்.

அதேபோல எப்படி பிரியாணி கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கும் பல கதைகள் உண்டு. இது ஈரானில் கண்டுபிடிக்கப்பட்டது என்று சிலர் கூறுகிறார்கள். மற்றவர்கள் இது புலாவின் வழித்தோன்றல் என்று கூறுகிறார்கள். ஆனால் லக்னோவின் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உணவளிக்க செய்யப்பட்ட பிரியாணி என்று ஒருசாரார் கூறுகின்றனர். டெல்லியில் ஆன்லைன் உணவு விநியோகத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி தான். இந்தியாவின் முக்கிய பிரியாணிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அவதி பிரியாணி: இந்த லக்னோவின் பிரியாணி வகை ஆகும். இது மிக வேகமாக சமைக்கப்படுகிறது. 

கல்கத்தா பிரியாணி : உருளைக்கிழங்கு, முட்டை மற்றும் இறைச்சியை இதனுடன் சேர்த்து, சாதம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது கெவ்டா, குங்குமப்பூ மற்றும் ஜாதிக்காய் பயன்படுத்தி சமைக்கப்படுகிறது.

மலபார் பிரியாணி : இது கேரள பிரியாணி என்றும் அழைக்கப்படுகிறது. உலர்ந்த பழங்கள் இதில் சேர்க்கப்படுகின்றன. இந்த பிரியாணியின் சுவையில் சிறிது புளிப்பு சேர்க்கப்படுகிறது.

காலிகட் பிரியாணி : இந்த அரிசி பிரியாணி மசாலா, கோழி மற்றும் வேகவைத்த முட்டைகளை கலந்து தயாரிக்கப்படுகிறது.

ஹைதராபாத் பிரியாணி : ஹைதராபாத் பிரியாணி பலரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். ஹைதராபாத் பகுதியின் சமையல் கலைஞர்களால் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த பிரியாணி தவிர்க்க முடியாதது. தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஹைதராபாத் பிரியாணி, கத்தி மற்றும் பக்கி என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது.

தேகி பிரியாணி : டெல்லியின் தெருக்களில் பரவலாகக் கிடைக்கும் பிரியாணிகளில் மிகவும் பிரபலமானது தேகி பிரியாணி. இது மிளகு சுவை கொண்டது. சுவையிலும், அமைப்பிலும் சற்று வித்தியாசமாக இருந்தாலும், அனைவருக்கும் பிடிக்கும்.

தலப்பாக்கட்டி பிரியாணி : தலப்பாக்கட்டி பிரியாணி தமிழகத்தில் பிரபலமடைந்துள்ளது. இந்த பிரியாணி நாகசாமி நாயுடு கையில் தயாராகிறது. இவர் தலையில் தலைப்பாகை கட்டியதால் தலப்பாக்கட்டி நாகசாமி நாயுடு என்றும் அழைக்கப்பட்டார். அதனால் இந்த பிரியாணிக்கு தலப்பாக்கட்டி பிரியாணி என்று பெயர் வந்தது.

ஆம்பூர் பிரியாணி : தமிழ்நாட்டின் ஆம்பூர் இந்திய தோல் தொழிலின் இடமாகும். இந்த இடம் தோல் தொழிலுக்கு மட்டுமின்றி ஆம்பூர் பிரியாணிக்கும் பெயர் பெற்றது. தமிழ்நாட்டின் இந்த இடத்தை நீங்கள் எப்போதாவது சென்று ஒருமுறை ருசித்துப் பார்த்தீர்களானால், நிச்சயம் உங்களை கவர்ந்துவிடும்.

நேர்காணல் இல்லை.. தேர்வு மட்டுமே.. 770 கிளார்க் வேலைகள் காத்திருக்கு.. வங்கியில் சேர அருமையான வாய்ப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios