Vellai Sambar Recipe : இந்த பதிவில் தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் சுலபமாக செய்வது எப்படி தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சில உணவுகள் மிகவும் பிரபலமாக இருக்கும். அந்தவகையில், இன்று இந்த பதிவில் தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். தனித்துவமான சுவையை கொண்ட இந்த சாம்பார் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது மிகவும் சுலபமாக செய்துவிடலாம். சரி வாங்க இப்போது தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: வாழைப்பூ வச்சு இப்படி ஒருமுறை சாம்பார் செஞ்சு பாருங்க.. அட்டகாசமா இருக்கும்!

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 100 கிராம்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன் 
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - சிறிதளவு
முள்ளங்கி - 1
அவரைக்காய் - 5
கத்தரிக்காய் - 1
புளி - எலுமிச்சை பழம் அளவு 
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தேங்காய் (அரைத்தது) - 1 கப்
பச்சை மிளகாய் - 5
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: முள்ளங்கி சாம்பார் ஒருமுறை இப்படி செய்ங்க.. ருசியா இருக்கும்!

செய்முறை:

முதலில் பருப்பை கழுவி வைத்துக் கொள்ளுங்கள் இப்போது அடுப்பில் குக்கரை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயம், மஞ்சள் தூள், பருப்பு ஆகியவற்றை சேர்த்து நான்கு முதல் ஐந்து விசில் வரை விட்டு எடுக்க வேண்டும். குக்கரில் விசில் போன பிறகு நறுக்கி வைத்த தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, அவரைக்காய், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மறுபடியும் மூன்று விசில் விட்டு இறக்க வேண்டும். குக்கரில் விசில் போன பிறகு அவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொதிக்க விடவும். பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காவை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காய் கொதிக்கும்போது மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். தாளித்த இதனை கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் ஊற்ற வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் போதும் சுவையான தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் தயார். சூடான சாதத்துடன் இந்த சாம்பார் ஊற்றி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.