Appalam Kulambu Recipe : இந்த கட்டுரையில் அப்பளம் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லையா? என்ன குழம்பு செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது. உங்கள் வீட்டில் அப்பளம் இருக்கிறதா? அப்படியானால் அதில் டேஸ்ட்டான குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பு சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையிலும் மற்றும் செய்வதற்கும் மிகவும் சுலபமாகவும் இருக்கும். பொதுவாகவே அப்பளம் என்றாலே குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுபவர்கள். எனவே, அப்பளம் வைத்து இந்த குழம்பை ஒருமுறை செய்து கொடுங்கள். அவர்கள் அடிக்கடி செய்து தரும்படி கேட்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் அப்பளம் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: காரசாரமான சுவையில் வெண்டைக்காய் புளிக்குழம்பு... இப்படி ஒருமுறை செஞ்சு சாப்பிடுங்க!

அப்பளம் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் : 

பொரித்து அப்பளம் - 7
புளி - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 10
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: ருசியான பூண்டு குழம்பு இப்பவே செஞ்சு சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

செய்முறை :

அப்பள குழம்பு செய்ய முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். இதனுடன் கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள் பிறகு நறுக்கி சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அதில் நறுக்கி பொடியாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளியுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி நன்கு மசிந்ததும் அதில் சாம்பார் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். சாம்பார் தூள் பச்சை வாசனை போன பிறகு அதில் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இப்போது கடாயை ஒரு தட்டால் மூடி வைக்கவும். குழம்பு கெட்டியாக வந்ததும், அதில் பொரித்து வைத்து அப்பளத்தை இரண்டாகவோ அல்லது அப்படியே போட்டு ஒருமுறை பிரட்டி போட்டு விடுங்கள். 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான அப்பள குழம்பு தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D